Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
மகப்பேற்று மருத்துவரின் கைதின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

Sooriyan Gossip - மகப்பேற்று மருத்துவரின் கைதின் பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,906 Views
அமெரிக்காவின் பிரசித்திபெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மகப்பேறு மருத்துவர் ஜோர்ஜ் டிண்டால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரென்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மருத்துவ பரீட்சையின் போது 16 இளம்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக குறைபாடுகளும் குற்றச்சாட்டுக்களும் இவர் மீது முன்வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகால மருத்துவ தொழிலில் நூற்றுக்கணக்கான பெண் நோயாளிகளிடமும் அவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அவரை பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்த நிலையில் குறித்த மருத்துவர் குற்றவாளி என்று நிரூபணமானால், அவருக்கு 53 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்று மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

72 வயதான மருத்துவரான ஜோர்ஜ், 1990-களிலிருந்தே பாலியல் தொந்தரவு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அந்த பல்கலைக்கழகத்தில் கற்ற பெண் ஆசிய மாணவர்கள். அவரால் அதிகமாக பாதிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 
ஆங்கிலத்தில் புலமையில்லாதும், மகப்பேறு தொடர்பான தேர்வுகளில் அனுபவம் இல்லாததும் அவருக்கு சாதகமாக அமைந்தது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

2016-ல் இருந்து இந்த முறைப்பாடுகளை விசாரித்த லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அதிகாரிகள், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியபின் அவரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top