Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
'தளபதி'யுடன் நடனமாடப்போகின்றார் 'சூப்பர்ஸ்டார்' - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "பிகில்"

Sooriyan Gossip - 'தளபதி'யுடன் நடனமாடப்போகின்றார் 'சூப்பர்ஸ்டார்' - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் "பிகில்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,050 Views
'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் நாள் முதல் வெள்ளித்திரை காணும் நாள் வரைக்கும் படம் பற்றிய ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களும்  சமூக வலைத்தளங்கள் மூலம் அவரவர் ரசிகர்களால் அதீத உற்சாகத்துடன் பெருமெடுப்பில் கொண்டாடப்படுவது வழமை.
இந்தநிலையில், 'தல' அஜித் இயக்குனர் வினோத் மீளுருவாக்கம் செய்யும் படமான "நேர்கொண்ட பார்வை" படத்தில் நடித்துக்கொண்டிருக்க, 'தளபதி' விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ 3வது முறையாக இணைந்துள்ள "பிகில்" திரைப்படம் படமாகிக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், இரண்டு படங்கள் பற்றியும் கசிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் பெரும் வரவேற்பு கொடுக்கின்றனர் ரசிகர்கள்.

'தளபதி' விஜய்யின் "பிகில்" திரைப்படத்தில் நட்சத்திர நடிகரான சத்யராஜ் இணைந்துள்ளதுடன், இந்துஜா, கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி போன்ற பிரபல நடிகர்களும் இடம்பிடித்துள்ள நிலையில், தற்போது இன்னும் பெரிய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கின்றது "பிகில்". காரணம், தமிழ் ரசிகர்களுக்கு மிகப் பரிச்சயமானவரும், 'பொலிவூட் சூப்பர்ஸ்டார்' ஆக இன்னும் வசூல் வேட்டை செய்யும் நடிகர் ஷாருக்கான் "பிகில்" படத்தில் தோன்றவுள்ளார் என்ற செய்தி தான்.

அண்மைக்காலமாக ஊகத்தின் அடிப்படையில் பேசப்பட்ட ஒரு விஷயம் தான் "பிகில்" படத்தில் ஷாருக்கான் பங்கெடுக்கின்றார் என்பது. ஷாருக்கான் விஜய்க்கு வில்லனாக நடிக்கின்றார் என்று ஒரு வதந்தி கிளம்பியிருக்க, மிக முக்கிய வேடமொன்றை ஏற்று நடிக்கின்றார் ஷாருக் என வேறொரு பக்கமிருந்து செய்திகள் பரவ ஆரம்பித்தன. ஆனால், யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.


இந்நிலையில் தான், "பிகில்" திரைப்படத்தின் ஒரு பாடலில் நடிகர் ஷாருக்கான் நடனமாடப் போகின்றார் என்று ஒரு கிசுகிசு கிளம்பியுள்ளது. இதனால், ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகமும் "பிகில்" படம் பற்றி கிளம்பும் செய்திகளை உற்றுநோக்க ஆரம்பித்துள்ளதாக கோடம்பாக்கம் காற்று சொல்லிச் செல்கின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top