Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
அமேசன் மழைக்காடுகள் அதி வேகமாக அழிந்துவரும் மர்மம்

Sooriyan Gossip - அமேசன் மழைக்காடுகள் அதி வேகமாக அழிந்துவரும் மர்மம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

583 Views
பிரேசில் நாட்டில் காணப்படும் அமேசன் மழைக்காடுகள், அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றார்கள்.

அமேசன் மழைக்காடுகளின் மூன்றில் இரண்டு பங்கு காடுகள், பிரேசில் நாட்டின் எல்லைக்குள்தான் இருப்பதாக கூறப்படுகின்றன .
 
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசன் காடுகளில் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசன் காடுகளின் பெரும் பரப்பு, பிரேசில் நாட்டு எல்லைக்குள்தான் இருக்கிறது.

ஓராண்டு காலகட்டத்தில் மட்டும், பிரேசிலில் உள்ள சுமார் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அமேசன் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த காடுகள் அண்மை காலமாக தீவைத்து அழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் பிரேசிலில் 4,565 சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் பிரேசில் அரசாங்கம் சமீபத்திய தகவல்களை சேகரித்தது. இந்தநிலையில் மாடோ கிராசோ மற்றும் பாரா ஆகிய மாகாணங்களில் காடுகள் அழிப்பு கடந்த ஆண்டைவிட 13.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாடோ கிராசோ மாகாணம் பிரேசில் நாட்டில் அதிகம் தானிய உற்பத்தி செய்யும் மாகாணமாகும். அங்கு வேளாண்மை நடவடிக்கைகளை விரிவாக்குவது அமேசன் காடுகளை அழிக்க வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வனப்பகுதிகள் அதிகளவு அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வரும் சுற்றுசூழல் ஆர்வலர்கள், காடுகளை அழிக்கும் கொள்கையை விடுத்து, அமேசன் காடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top