Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
விருது பெறுவாரா "விருது" பட இயக்குனர்......??? - தமிழ்த் திரையுலக முதல் இளம் இயக்குனர்.

Sooriyan Gossip - விருது பெறுவாரா "விருது" பட இயக்குனர்......??? - தமிழ்த் திரையுலக முதல் இளம் இயக்குனர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

189 Views
ஆதவன் என்ற பெயரைக் கேட்டால் உடனே எல்லோருக்கும் ஞாபகம் வருவது சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான். ஆனால் இப்போது நாம் தெரிந்து கொள்ளப்போவது இயக்குனர் ஆதவன் குறித்து.
விரைவில் திரை காணும் என்ற நம்பிக்கையுடன் படமாகிக்கொண்டிருக்கும் "விருது" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனர் அவதாரமெடுத்திருக்கும் 17 வயதேயான இளைஞன் தான் இந்த ஆதவன். வயதில் இளைய முதல் தமிழ்த் திரையுலக இயக்குனர் என்ற பெருமையோடு திரைக்களம் புகுந்திருக்கும் இவரை நம்பி முதலீடு செய்து "விருது" திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றார் தயாரிப்பாளர் ஆதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி "விருது" திரைப்படத்தை இயக்குகின்றார் இந்த ஆதவன்.

அனுபவ இயக்குனர்களை நம்பி முதலீடு செய்வதற்கே பலமுறை சிந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் இளைஞன் ஆதவனை நம்பி 'ஆதி போட்டோஸ்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் துணிந்து பணத்தை கொட்டியிருக்கும் நிலையில், படத்தின் கதாநாயகனாக நடிப்பவரும் ஒரு புதுமுகம் என்பது தான் சுவாரஸ்யமான விஷயம்.

பதினைந்து வயதை கொண்ட அச்சயன் என்கிற புதுமுகம் ஒருவர் இந்த "விருது" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகுக்கு அறிமுகமாகின்றார். இதில், நாயகி நடிகைகளாக அச்சயனுக்கு ஜோடி போடவிருக்கின்றார்கள் திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று இளஞ்சிட்டுக்கள். இந்த மூன்று நாயகி நடிகைகளும் புதுமுகங்கள் என்பதோடு, இவர்களது முதற்படமும் இதுவே.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் திரையிசை வழங்க, இந்த "விருது" திரைப்படம் மூலம் கோடம்பாக்கம் திரும்பியிருக்கின்றார் தனுஷ் நடிப்பில் வெளிவந்து சக்கைப்போடு போட்ட "திருடா திருடி" படத்தின் மன்மதராசா பாடல் மூலம் உள்ளம் எல்லாம் துள்ள வைத்த இசையமைப்பாளர் தீனா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top