Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
வாரிசு அரசியலை வறுத்தெடுக்கும் பிரபல இயக்குனர் - விவாதப் பொருளாக மாறியது பேச்சு.

Sooriyan Gossip - வாரிசு அரசியலை வறுத்தெடுக்கும் பிரபல இயக்குனர் - விவாதப் பொருளாக மாறியது பேச்சு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
தென்னிந்திய அரசியலும் திரைத்துறையும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த ஒன்று என்றால் மிகையில்லை. திரையில் மின்னிய பிரபல நட்சத்திரங்கள் பல, பின்நாட்களில் அரசியலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற அரசியல் பிரமுகர்களாக மிளிர்ந்தது கண்கூடு.
அதேபோன்று திரைத்துறைக்குள்ளும் அரசியல் புகுந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதையும் அண்மைய நாட்களில் நடைபெறும் சம்பவங்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, அண்மையில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலையும், அதில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் குறிப்பிட்டுக் கூறலாம்.

இந்தநிலையில், விழா ஒன்றில் பங்கெடுத்த பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ், அந்த நிகழ்வில் உரையாற்றும்போது சினிமாவுடன் இணைத்து நிகழ்கால அரசியல் தொடர்பில் கூறிய ஒரு கருத்து தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் திரை காணவுள்ள "அசுரகுரு" திரைப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட பாக்யராஜ், 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடித்தான் வெற்றிபெற வேண்டியுள்ளது. ஆனால், அரசியலைப் பொறுத்தவரைக்கும் அப்படியொரு நிலை இல்லை. அரசியல் வாரிசுகள் ஒரே இரவில் அரசியலில் முன்னிலைக்கு வந்துவிடுகிறார்கள்' என்று ஒரு கருத்தை பொதுவெளியில் முன்வைத்திருந்தார்.

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்த கருத்தே தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. காரணம், அண்மையில் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணியின் செயலாளராக, நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றிருந்தார். இவர் தற்போதைய திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதனால், கட்சியின் மூத்த அனுபவஸ்தர்கள் பலரைப் பின்தள்ளி வாரிசு அரசியல் வாய்ப்பின் மூலம் பதவியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

நேரடி அரசியல் அனுபவம் என்பது அவ்வளவு இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியின் மிகமுக்கிய பதவி வழங்கப்பட்டமை குறித்து மனதில் வைத்து, அதனை விமர்சனம் செய்யும் வகையிலேயே பாக்யராஜ் இப்படி மறைமுகமாக கருத்து சொல்லியுள்ளார் என்று குறை கூற ஆரம்பித்துள்ளனர் கருணாநிதி குடும்பத்தை நேசிப்போர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top