Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
09
செவிலியர்களின் கவனயீனம் - 360Kg நிறை மனிதர் பரிதாபமாகப் பலி

Sooriyan Gossip - செவிலியர்களின் கவனயீனம் - 360Kg நிறை மனிதர் பரிதாபமாகப் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

529 Views
360 கிலோ நிறைகொண்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். 

பாகிஸ்தானின் சாதிக்காபாத்தை சேர்ந்தவர் நூருல் ஹசன். இவருக்கு தற்போது வயது 55. சுமார் 360 கிலோ நிறைகொண்ட இவர் மிகவும் பருமனாக தோற்றத்தையுடையவர் ஆவர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 28ம் திகதி நூருல் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதிக நிறை காரணமாக இவரால் சாதாரண மக்கள் போன்று இயல்பு வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

இவர் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் கூட, இராணுவ ஹெலிகாப்டர் மூலமாகவே லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், நூருல் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவரை கண்காணித்து வந்தனர்.


குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளி ஒருவர் நேற்றுக் காலை உயிர் இழந்திருக்கின்றார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினார்கள். மருத்துவமனையை தாக்கியதால் அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் ஊழியர்கள் உள்ளிட்டோர் அலறி கூச்சலிட்டபடி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியுள்ளார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நூருலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அங்கு பணியில் இருந்து செவிலியர்கள் வெளியேறி இருந்ததால், நூருலை கவனிக்க யாரும் இல்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மணி நேரம் கடந்தும் அவருக்கு சிகிச்சையளிக்க யாரும் இல்லாததால், அவரது நிலைமை மிகவும் மோசமானது.

பின்னர் அங்கு வந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த மற்றொரு நோயாளியும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top