Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
வேண்டாத வேலையில் இறங்கியிருக்கும் பிரபல நடிகை - அனுதாபப்படும் திரையுலம்.

Sooriyan Gossip - வேண்டாத வேலையில் இறங்கியிருக்கும் பிரபல நடிகை - அனுதாபப்படும் திரையுலம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

886 Views
தென்னிந்தியத் திரையுலகம் என்று பொது வார்த்தைக்குள் உள்ளடங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் மிக முக்கிய மொழிகளில் தயாராகும் படங்களில் ஒரே நேரத்தில் ஓய்வின்றி நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை இனியா.
திரைத்துறையில் மின்னிக்கொண்டிருக்கும் முன்னணி நடிகைகள் வட்டத்தில் தன் பெயரையும் உள்ளடக்க வேண்டுமென்ற ஆவலோடு மிக மும்முரமாக படங்களை ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றார். இந்தநிலையில், நடிப்பதோடு நின்றுவிடாது தயாரிப்புத் துறையிலும் கால் பதிக்கும் ஆசையும் இனியாவை ஆட்கொண்டுள்ளது.

தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உந்தித் தள்ளியதால், பரீட்சார்த்த முயற்சியாக தற்போது "மியா" என்ற காணொளி இசை தொகுப்பை சொந்தமாகத் தயாரித்துள்ளார் இனியா. இதில், 'சர்வதேச நடனப்போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு திறமையும், விருப்பமும் இருந்தும் எதோ ஒரு காரணத்தால் போட்டியில் பங்கேற்காமல் இருக்கும் மியா என்ற பெண்ணை எதிர்பாராமல் சந்திக்கும் இளைஞன் ஒருவன், அந்தப் பெண்ணின் திறமை கண்டு வியந்து, தானே அந்தப் பெண்ணிற்கு நடனம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகி, அந்தப் பெண்ணை வெற்றிபெற வைப்பதாக அமைகின்றது அந்த இசை காணொளி.

மியா என்ற நடனப் பெண் வேடத்தில் குறித்த இசை காணொளியில் தோன்றிய இனியா கூறும்போது, "நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறேன்" என்கிறார்.

நடிகை இனியாவின் ஆசை இப்படியிருக்க, தயாரிப்பாளர் ஆகிறேன் என்று களமிறங்கி, சிறுகச் சிறுக சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தொலைத்து விட்டு பல பேர் ஓட்டாண்டிகள் ஆகியும், சிலர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், நடிப்பில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வேண்டாத வேலை எதுக்கு இந்தப் பெண்ணுக்கு...? என்று கவலைப்பட ஆரம்பித்துள்ளது திரையுலகம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top