Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
HIV தொற்றை இல்லாதொழிக்க சட்டம் அமுலாகின்றது - கோவா சுகாதாரத்துறை அமைச்சர்

Sooriyan Gossip - HIV தொற்றை இல்லாதொழிக்க சட்டம் அமுலாகின்றது - கோவா சுகாதாரத்துறை அமைச்சர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

175 Views
எய்ட்ஸ் எனும் உயிர்கொல்லி தொற்றுநோய் தொடர்பில் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோய்த் தாக்கமும் அதன் பாரதூரமான விளைவும் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV வைரஸ் தாக்கத்தை முற்றாகக் கட்டுப்படுத்தி, மக்களை காப்பாற்றும் பாரிய முயற்சியில் மருத்துவத்துறை சார்ந்த விஞ்ஞானிகள் போராடிக்கொண்டிக்கும் நிலையில், இந்தியாவின் கோவா மாநிலத்தில் HIV தொற்றை கட்டுப்படுத்தும் வகையிலான புதியதொரு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதிக சனத்தொகை கொண்ட நாடான இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் HIV தொற்றாளர்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர். இந்த நிலையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர் தமக்குள்ள நோய் தொற்றை மறைத்து சுகதேகியாக உள்ளவர்களை திருமணம் செய்து கொள்வதனால் மேலும் மேலும் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துச் செல்கின்றது.

இவ்வாறு முறைகேடான செயற்பாட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கட்டுப்படுத்தும் வகையில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் HIV பரிசோதனை மேற்கொண்டு கட்டாயம் மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சட்டம் கோவா மாநில அரசினால் கொண்டுவரப்படுகின்றது.

இவ்வாறு கொண்டுவரப்படும் புதிய சட்டமூலம் தொடர்பில் கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே விபரம் தெரிவிக்கையில், இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்து, எதிர்வரும் சட்டசபை கூட்டத்தில் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்து அங்கும் அனுமதி கிடைத்தவுடன் HIV தொடர்பான இந்த சட்டம் விரைவில் அமுலுக்கு வரும் என்கிறார் அமைச்சர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top