Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
தேன் கூட்டில் தவறுதலாகக் கை வைத்ததால், பரிதாபமாகப் பலியான தொழிலாளி

SooriyanFM Gossip - தேன் கூட்டில் தவறுதலாகக் கை வைத்ததால், பரிதாபமாகப் பலியான தொழிலாளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,602 Views
கேரளாவிலுள்ள தொழிலாளி ஒருவர்,  தேன் கூட்டில் தவறுதலாக கை வைத்துள்ளார். இதனை அடுத்து அவரை  தேனீக்கள் விரட்டி விரட்டிக் கொட்டியதில், அவர் பரிதாபமாகப் பலியானார். 

கேரள மாநிலம் கன்னூர் பகுதியை சேர்ந்த பாபு என்ற தொழிலாளியே சம்பவத்தில் பலியானார். இவர் அதே பகுதியில் உள்ள இறப்பர் மரத்தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார். அன்று தனது சக ஊழியர்களுடன் பராமரிப்பு பணிகளுக்காக மரத்தின் மேல் ஏறிய பாபு, திரும்ப இறங்கும் போது ஒரு கிளையின் மீது இருந்த தேன் கூட்டை தெரியாமல் தட்டிவிட்டு விட்டார்.

உடனே அதிலிருந்த தேனீக்கள் அவரை தாக்கத் தொடங்கியுள்ளன. உடனே அவர் மரத்திலிருந்து கீழே குதித்தார். கீழே நின்று கொண்டிருந்த மற்ற ஊழியர்களையும் தேனீக்கள் தாக்கத் தொடங்கியதால், அனைவரும் அங்கிருந்து ஓடத் தொடங்கினர்.

சக ஊழியர்களுடன் இணைந்து பாபுவும் ஓடினார். எனினும், பாபுவை விடாமல் துரத்தி வந்த தேனீக்கள், அவரது உடலில் தாறுமாறாகக் கொட்டின. தேனீக்களின் தாக்குதலால் நிலைகுலைந்து போன பாபு அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார்.

பாபுவைக் காப்பாற்ற, ஏனைய ஊழியர்கள் தீப்பந்தங்களை எடுத்து வந்து தேனீக்களை விரட்டி பாபுவை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், தேனீக்களின் விஷம் உடலில் அளவுக்கதிகமாக பரவியிருந்ததால், சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாகப் பலியானார். தேனீக்களின் இந்த கொடூரத் தாக்குதல், அந்த பகுதியில் உள்ள மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top