Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
புதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனா

Sooriyan Gossip - புதிய தலாய் லாமா விடயத்தில் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்த சீனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

219 Views
புதிய  தலாய் லாமா விடயத்தில், இந்தியா தலையீடு செய்யக்கூடாது என்று, சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

அடுத்த தலாய் லாமா சீனாவில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், சீனா தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
 
திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமா, 1959-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் வாழ்ந்து வருகின்றார்.

இவருக்கு தற்போது 84 வயது ஆகும். இந்த நிலையில், புதிய தலாய் லாமாவைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

திபெத், மீது சீனா ஆக்ரமிப்பு செய்த போது, 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா, இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.

இந்நிலையில் சீனா தேர்ந்தெடுக்கும் புதிய தலாய் லாமாவை இந்தியா அங்கீகரிக்காவிட்டால், இருநாடுகளின் உறவையும் அது பாதிக்கும் என்று, சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திபெத் துணை மந்திரி அந்தஸ்து வகிக்கிற சீன அதிகாரி வாங் நேங் ஷெங் கூறும்போது, “தலாய் லாமா நியமன விவகாரம், வரலாறு, மதம் மற்றும் அரசியல் ரீதியிலானது. அதற்கான வரலாற்று அமைப்புகள் உள்ளன. நடைமுறைகளும் உள்ளன. தலாய் லாமா யார் என்பதை எந்த தனிப்பட்ட நபரோ அல்லது வெளிநாடுகளில் உள்ள மக்களோ தீர்மானிக்க முடியாது” என கூறியுள்ளார்.

இதேபோன்று சீனா, திபெத் ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஜா லுவோ கூறுகையில், “அடுத்த தலாய் லாமா யார் என்பது சீனாவுக்கு முக்கியமான பிரச்சினை. இதில் எந்த நட்பு நாடோ, சீனாவின் நண்பர்களோ தலையிட கூடாது” என்று திட்டவட்டமாக கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top