Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
தன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.

Sooriyan Gossip - தன்னைத் தீண்டிய பாம்பை கடித்துக் குதறிய முதியவர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

467 Views
இருவருக்கிடையில் சண்டை என்று வரும்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்குவது வழமை. இதில், மனிதர்கள் அன்றி விலங்குகளும் ஒன்றோடொன்று மூர்க்கமாக மோதிக்கொள்வதை நேரிடியாகக் கண்டுமிருக்கின்றோம். ஆனால், மனிதனும் கொடிய விஷம் கொண்ட பாம்பும் மாறி மாறி கடித்துக்கொண்டதை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா....?
மகிஷாகிர் என்ற மாவட்டம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள ஒரு முதியவருக்கும் கொடிய விஷம் கொண்ட ஒரு பாம்புக்கும் இடையிலேயே இந்த சண்டை நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. பரிதாபம் என்னவென்றால், இந்த சண்டையின் இறுதியில் பாம்பும், அந்த முதியவரும் இறந்து போனமை தான்.

மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவர் பார்வத் காலா பாரியா. இவர், ஒரு சில தினங்களுக்கு முன்னர் சோளக்கதிர்களை ஏற்றிக்கொண்டிருந்த பாரவூர்திக்கு பக்கத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த வேளையில், கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று அவரை நெருங்கிச் சென்று காய் மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் தீண்டியது.

எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலைகுலைந்த குறித்த முதியவர் அதீத ஆத்திர மேலீட்டால் அந்தப் பாம்பை தனது கைகளால் பிடித்து கோபம் தீர வாயினால் கடித்து குதறிவிட்டாராம். இவ்வாறு அவர் ஆக்ரோஷமாக கடித்ததில் பாம்பு இறந்து விட்டது. இந்தநிலையில், குறித்த முதியவரை தீண்டிய பாம்பு கொடும் விஷம் கொண்டது என்பதால் அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினர்.

இருந்தும், பாம்பினுடைய விஷத்தின் வீரியம் உடலில் அதிகரித்ததால் குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணித்தார். இந்த விசித்திர சம்பவத்தை குஜராத் காவல்துறையினர் வழக்காகப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதிலேயே இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top