Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
சின்னக் குயிலுக்கு இன்று 55 - சிறப்புப் பகுதி

SooriyanFM Gossip - சின்னக் குயிலுக்கு இன்று 55 - சிறப்புப் பகுதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

691 Views
சின்னக் குயில் என்று திரை இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.சித்ரா இசையுலகுக்கு வந்து 38 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.

ஆனாலும், வயதாகாத இந்தக் குரலுக்கு இன்று 55ஆவது பிறந்தநாள்.
பாடகி சித்ரா, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா, இந்தி, அஸ்ஸாமிஸ், பெங்காலி, படுகா, பஞ்சாபி ஆகிய மொழிகளில் 25,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

ஆறு தேசிய விருதுகளையும், 5 பிலிம்பேர் விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் சித்ரா. சித்ராவை முதலில் அறிமுகப்படுத்தியவர் மலையாள பின்னணிப் பாடகர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன்தான். 1979ம் ஆண்டு அட்டகாசம் என்ற மலையாளப் படத்தில் சித்ராவின் முதல் பாடல் இடம் பெற்றது. இருப்பினும், இந்தப் படம் 1983ம் ஆண்டுதான் வெளியானது. அவர் பாடிய முதல் பாடலில் இணைந்து பாடியவர் ஜேசுதாஸ் ஆவார். 

இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார் சித்ரா. ரஹ்மானின் இசையில் அதிக பாடல்களைப் பாடியவர் சித்ராதான். 

மொழி கடந்து தனது இனிய குரல்வளம் மூலம் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்த இந்த சின்னக்குயில் இன்னுமின்னும் பாடிக்கொண்டேயிருக்க வேண்டும் ; நம் காதுகளுக்கு இந்த இன்னிசை நாளெல்லாம் விருந்தாக வேண்டுமென்று இந்த நன்னாளில் சூரியனின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top