வெறும் 12 மணி நேரத்தில், சுமார் 35 கோடி மரங்களை நட்டு, எத்தியோப்பிய மக்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்காவில், சனத் தொகை அதிகம் கொண்ட 2வது நாடாக எத்தியோப்பியா இருந்து வருகின்றது. இந்த நிலையில், எத்தியோப்பிய வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வரும் நிலையில், மழைக்காலத்துக்கு முன் 400 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு எத்தியோப்பிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி நேற்று, எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது தலைமையில் ‘பசுமை மரபு’ என்ற பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெரும் அளவிலான மக்கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு 12 மணிநேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகளை நட்டு, உலக சாதனையை பதிவு செய்துள்ளார்கள்.
மரக்கன்று நாட்டும் நிகழாவிற்காக அங்கு அரசாங்க விடுமுறையும் வழங்கப்பட்டது.
மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் நல்ல மழை பொழிவதுடன், விவசாயம் செழிக்கும், வருமானம் கொழிக்கும் தண்ணீர்ப் பிரச்சனை தீரும், தூய்மையான காற்றால் வாழ்நாள் கூடும் எனப் பல நல்ல விடயங்களை கருத்தில் கொண்டே இந்த உலக சாதனை பதிவாகியுள்ளது.