Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
ஒசாமா குடும்பத்தில் மற்றுமொரு இழப்பு - கருத்து வெளியிட மறுக்கும் டிரம்ப்

Sooriyan Gossip - ஒசாமா குடும்பத்தில் மற்றுமொரு இழப்பு - கருத்து வெளியிட மறுக்கும் டிரம்ப்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

670 Views
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். இவரின்  மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. 

ஒசாமா பின்லேடன் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கொடூர பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார்.

இதன் காரணமாக, இவர் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இதனிடையே, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரது மகனான 29 வயதான ஹம்ஸா, தனது தந்தையான பின்லேடனை கொலை செய்தமைக்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இப்படியிருக்க, ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வந்த செய்திகளின் அடிப்படையில்,
ஹம்ஸா பின்லேடனை, அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இது இப்படி இருக்க, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் தொடர்பில் தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று, அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என, அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயரதிகாரிகள் மூன்று பேர், இத்தகவலை தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலையில் அமெரிக்காவிற்கு தொடர்பு இருக்கிறதா ?என்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கடந்த 2 ஆண்டில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனபோதிலும், இந்த அறிவிப்பு தொடர்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.

Make a Comment
Make a Comment

இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip

Recent Gossip Post

Top 10 Commenters

Latest Comments

Top