Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
பூனைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு சிறை!

SooriyanFM Gossip - பூனைகளுக்கு உணவளித்த மூதாட்டிக்கு சிறை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
பூனைகளுக்கு உணவளித்துள்ளார், அதுவும் பலமுறை எச்சரித்த பிறகும், உள்ளூர் சட்டத்தை மீறி ஆதரவற்ற பூனைக்கு உணவளித்த காரணத்தால், அமெரிக்காவை சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு, பத்து நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பலரையும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது.

நான்சியின் செயல்பாட்டின் காரணமாக, ஆதரவற்ற பூனைகள் கூடுவது எங்களுக்கு அதிகளவான தொல்லையைக் கொடுக்கிறது என, அயலவர்கள்,கடந்த நான்காண்டுகளாக, தொடர்ந்து புகாரளித்து வருவதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தனக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அறிந்துக் கொண்ட பிறகு, அதுகுறித்துப் பேசிய மூதாட்டி , "எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும் "நான் பூனை விரும்பி' எட்டு பெரிய பூனைகளும், அவ்வப்போது சில குட்டி பூனைகளும் என்னைத் தேடி வருகின்றன.என்னுடைய அன்புக் கணவர் மட்டுமின்றி, நான் சொந்தமாக வளர்த்த பூனைகளும் உயிரிழந்துவிட்டன. தனிமையில் இருக்கும் எனக்கு இந்த பூனைகள் ஆதரவளிக்கின்றன." என தன் வேதனையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

11ஆம் திகதி முதல் நான்சி தனது 10 நாள் தண்டனைக் காலத்தை அனுபவிக்கத் தொடங்க வேண்டுமென்று, ஒஹாயோவிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பல தடவை இந்த மூதாட்டிக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தான் செய்த செயலுக்கும், தற்போது விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கும் பொருத்தமில்லை என்று கூறும் நான்சி, ஏற்கனவே அபராதமும் செலுத்தியதாகவும் "சமூகத்தில் மிகவும் மோசமான செயலை பலர் செய்யும்போது, நான் செய்த செயலுக்கு இந்த தண்டனை மிகவும் அதிகமானது" என்றும் கூறியுள்ளார்.

"எனது அம்மாவுக்கு 10 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில்,என்னுடைய 79 வயதாகும் அம்மாவையும் வைக்கப் போகிறார்களா?" என அவரின் மகனும் மிகவும் வேதனையோடு கேட்டுள்ளார்.

அது எப்படி இருப்பினும் இந்த பத்து நாள் சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்தும் நீதிமன்றம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை,இந்த மூதாட்டியின் வீட்டிலிருந்து 22 பூனைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top