Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
02
சவுதி பெண்களுக்கு மேலும் ஒரு அதிஷ்டம்

Sooriyan Gossip - சவுதி பெண்களுக்கு மேலும் ஒரு அதிஷ்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

587 Views
சவுதி அரேபிய பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு ஒன்றை, அந்நாட்டு அரசாங்கம் தளர்த்தியுள்ளது. 

சவுதி அரேபியாவில் மிகவும் கடுமையான சட்டதிட்டங்கள் இருக்கும் நிலையில், குறிப்பாக பெண்களுக்கு பெரும் கட்டுப்பாடு பல விடயங்களில் காணப்படுகின்றன.
 
இந்த நிலையில் சவுதி அரேபிய பெண்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல, தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இதுவரை அமுலில் இருந்து வந்தது.

இவ்வாறான சட்டங்கள் தொடர்பில் உலக அளவில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அந்த சட்டத்தை அரேபிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

அதில், 21 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் இனி ஆண்களின் ஒப்புதல் இல்லாமலேயே பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முடியும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சவுதி பெண்களுக்கான வெளிநாட்டு பயண கட்டுப்பாடும் முடிவுக்கு வந்தது. அத்துடன் இந்த கட்டுப்பாடு தளர்வு தொடர்பில், அந்த நாட்டின் அரசாங்க நாளிதழில் செய்தியும் வெளியாகியுள்ளது.
 
இஸ்லாமிய நாடான சவுதியில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், முகமது பின் சல்மான் இளவரசராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு செயற்பாடாக, 40 ஆண்டுகளுக்கு பின்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
 
மேலும், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்க அனுமதி, கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி போன்ற சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் நினைவு கூரத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top