Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
03
விபத்தில் சிக்கிய பிரபல திரை நட்சத்திரம் - படப்பிடிப்பு இடைநிறுத்தம்.

SooriyanFM Gossip - விபத்தில் சிக்கிய பிரபல திரை நட்சத்திரம் - படப்பிடிப்பு இடைநிறுத்தம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

286 Views
கன்னடத் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக மின்னும் நடிகர் சுதீப், தமிழ் ரசிகர்கள் மனதிலும் "நான் ஈ", "புலி", "முடிஞ்சா இவனைப் புடி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் இடம்பிடித்துள்ளார். அத்துடன், ஹிந்தித் திரையுலகிலும் தனது திறமையை வெளிக்காட்ட "தபாங் 3" படத்தில் நடித்திருக்கின்றார் நடிகர் சுதீப்.

கன்னட மொழியில் தயாரிக்கப்படும் "கோட்டிகோபா 3" என்ற புதிய படம் ஒன்றில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சுதீப், இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தினால் முதுகில் காயமடைந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு அரங்குகள் அமைத்து தொடர்ச்சியாக படப்பிடிப்பு இடம்பெற்றுவரும் நிலையில், சண்டை காட்சியொன்றை படமாக்கும்போதே எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு நடிகர் சுதீப்பின் முதுகில் பலத்த அடிபட்டது.
 
இந்தநிலையில், அவரை அருகில் இருந்த தனியார் வைத்தியசாலையில் கொண்டுசென்று அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன், சில வாரங்கள் சுதீப் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் "கோட்டிகோபா 3" படப்பிடிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
 
இதேவேளை, பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஹிந்தித் திரையுலகில் "தபாங் 3" என்ற படத்தை இயக்கம் நிலையில் தற்போது அதன் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த "தபாங் 3" என்ற ஹிந்தித் திரைப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிகர் சுதீப் நடித்துள்ளதுடன், இவரது காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன என்கின்றது "தபாங் 3" படக்குழு.  
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top