Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
நீங்கள் கணினி முன், அதிக நேரம் அமர்ந்துள்ளீர்களா? - அப்படியாயின்...

SooriyanFM Gossip - நீங்கள் கணினி முன், அதிக நேரம் அமர்ந்துள்ளீர்களா? - அப்படியாயின்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

187 Views
கணினித்திரையை அதிக நேரம் பார்ப்பவர்கள், தமது கண்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் கூறுகின்றனர். 

குறிப்பாக உங்களது கணினித்திரையின் வெளிச்சத்தை முடிந்தளவு குறைத்துக் கொள்வது கண்களுக்கு, பாதுகாப்பைத் தரும் என தெரிவிக்கப்டுகின்றது. 15 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களுக்குச் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பது நல்லது.

அதற்கு சாத்தியமில்லாதவர்கள் உள்ளங்கைகளால் கண்களை மென்மையாக மூடி அதிலிருந்து வரும் இளஞ்சூடு மூலம், இரண்டு நிமிடங்கள் ஓய்வு கொடுக்கலாம். இது எமது கண்களை பாதுகாப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளையும் உடலையும் நீட்டி, மடக்கிக் கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம். கணினியில் தட்டச்சு செய்யும் போது உடலை நேர்க்கோட்டில் வைத்திருப்பது அவசியம். அப்போது முதுகுத்தண்டு நேராக இருக்கும். இப்படிச் செய்வதால் உடல் வலியைக் குறைக்கலாம்.

தட்டச்சு செய்யும்போது முழங்கைகளை இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு ஆதரவாக இருக்கும். தோள்பட்டை வலியும் குறையும்.

தொடர்ந்து எட்டு அல்லது பத்து மணி நேரமாக, கணினித்திரைக்கு முன்பாக அமர்வதால், முதுகு வலி அதிகம் ஏற்படுகிறது. எனவே தொடர்ச்சியாக கணினித்திரைக்கு முன்னால் இருந்து பணியாற்றுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என, மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top