Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
பறக்கும் மனிதனின் இரண்டாவது முயற்சி வெற்றி - பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு 20 நிமிடத்தில் பறந்து சாதனை

SooriyanFM Gossip - பறக்கும் மனிதனின் இரண்டாவது முயற்சி வெற்றி - பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்கு 20 நிமிடத்தில் பறந்து சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,094 Views
கால்களில் Hover board இயந்திரத்தை பொருத்தி, பிரான்ஸ் - இங்கிலாந்துக்கு  இடையே உள்ள  கால்வாயை கடக்கும்  இரண்டாவது  முயற்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸை  சேர்ந்தவர் franky zapat.  மோட்டார் படகு போட்டி சாம்பியனாக இருந்த இவர், ஹோவர் போர்ட்  என்ற ஜெட் இயந்திரத்தை உருவாக்கி வானில் பறக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 
இத்திட்டத்துக்கு பிரான்ஸ் 1.4 மில்லியன் டொலர் நிதியுதவி செய்தது. இதன்மூலம், ‘ஹோவர் போர்ட்’ எனப்படும் ஜெட் இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பறக்கும் இயந்திரத்தை அவர் உருவாக்கினார். அதை கால்களில் கட்டி நின்றபடியே, வானில் ஹெலிகொப்டர் போல் பறந்து தரையிறங்கினார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த மாதம் நடந்த ‘பாஸ்டில் டே’ (bastille day ) எனப்படும் இராணுவ அணிவகுப்பின்போது, இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வானில் அவர் பறந்தார். இந்த இயந்திரம் மூலம் 500 அடி உயரத்தில் மணிக்கு 87 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.

இவர் பிரான்ஸ் - இங்கிலாந்திற்கு இடையே உள்ள ஆங்கில கால்வாயை கடந்த மாதம் கடக்க முயன்றார். எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு படகில் அமைக்கப்பட்ட தளத்தில் அவர் இறங்கும்போது, பெரிய அலையின் காரணமாக படகு ஆடியபோது ஹோவர்போர்ட் இயந்திரத்தில் பலமாக மோதியது. இதனால், அவர் தடுமாறி கடலில் விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால், ஹோவர்போர்ட் இயந்திரம் சேதம் அடைந்தது. அதன்பின் ஒரு நாளைக்கு 15 முதல் 16 மணி நேரம் பணியாற்றி, ஹோவர்போர்ட் இயந்திரத்தை மீண்டும் சரி செய்தார்.

பிரான்சின் வட பகுதியில் உள்ள சங்காதே என்ற இடத்தில் இருந்து நேற்று காலை இவர், தனது ஹோவர்போர்ட் மூலம் பறந்தார். 20 நிமிடத்தில் ஆங்கில கால்வாயை கடந்து இங்கிலாந்தின் டோவர் பகுதி அருகே தரையிறங்கினார். இதன்படி, franky zapat இன் இந்த 2வது முயற்சி முழு வெற்றி பெற்றது.

இது குறித்து பிரான்கி கூறுகையில், ‘‘இங்கிலாந்தின் டோவர் பகுதியில் தரையிறங்கியது அருமையாக இருந்தது. முதலில் நான் எனது குடும்பத்தைதான் நினைத்தேன். இத்திட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருந்த எனது மனைவிக்கு நன்றி. நாங்கள் இதற்காக கடுமையாக உழைத்தோம். இந்த பயணத்தால், எனது தொடைகளில் எரிச்சல் ஏற்பட்டாலும், அதன் வலியை பற்றி நினைக்காமல் மகிழ்ச்சி அடைகிறேன்,’’ என்றார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top