Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
12
பொதுவெளியில் மன்னிப்புக் கேட்ட 'சூப்பர்ஸ்டார்' - ரசிகர்களால் வந்த சோதனை

Sooriyan Gossip - பொதுவெளியில் மன்னிப்புக் கேட்ட 'சூப்பர்ஸ்டார்' - ரசிகர்களால் வந்த சோதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
திரைத்துறை சார்ந்த 66வது தேசிய விருது விழா அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில், மகிழ்ச்சியும் துக்கமும் வெறுப்பும் விமர்சனங்களும் இணைந்த கலவையான செய்திகள் ஊடகங்களுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்த தேசிய விருது விழாவில் "மஹாநதி", "கே.ஜி.எஃப்", "பாரம்" உட்பட பல படங்கள் விருதுகளுக்காக தேர்வாகியதுடன், சிறந்த நடிகைக்கான விருதை கீர்த்தி சுரேஷ் தட்டிச் சென்றுள்ளார். இந்தநிலையில், மலையாளத் திரைப்படமான "பேரன்பு" படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் இந்தப் படம் விருதிற்கு பரிந்துரை செய்யப்படாமையினால் 'மல்லுவூட்' சூப்பர்ஸ்டார் மம்முட்டி ரசிகர்கள் கோபத்தில் கொதித்துபோயுள்ளார்கள்.

மம்முட்டியின் சிறப்பான நடிப்பில் கடந்த வருடம் திரைக்கண்ட "பேரன்பு" திரைப்படம் நல்லவிதமான விமர்சனங்களை பெற்று ஓடியதன் காரணமாக இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இருந்தும், விருது பரிந்துரைக்கான பட்டியலில் கூட நடிகர் மம்முட்டியின் பெயர் தெரிவாக்கவில்லை என்று அறிந்துகொண்ட மம்முட்டி ரசிகர்கள், தேசிய விருதுத் தேர்வாளர்களில் முக்கியமானவரான ராகுல் ராவில் என்பவரின் FACEBOOK பக்கத்தில் அவரை வறுத்தெடுத்திருக்கின்றார்கள்.

மம்முட்டியின் ரசிகர்கள் ராகுல் ராவிலை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் வதைத்த நிலையில், அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ராகுல் ராவில், நடிகர் மம்முட்டியிடம் இது சம்பந்தமாக முறையிட்டிருந்தார். அவரது குறித்த முறைப்பாட்டில் "மிஸ்டர் மம்முட்டி...! உங்கள் ரசிகர்கள் என்னை நோக்கி வெறுப்பான சொற்களை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். "பேரன்பு" திரைப்படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை. அதற்கு காரணம் என்ன...? என்று என்னைக் கேள்வி கேட்கின்றனர். அதற்கு விளக்கம் அளிக்கிறேன். எல்லாவற்றுக்கும் முதலில் ஒன்றைக் கூறிக்கொள்கின்றேன். நடுவரின் தீர்ப்பை யாரும் கேள்வி கேட்க முடியாது.

அதேநேரம் உங்களின் "பேரன்பு" திரைப்படம் பிராந்திய குழுவினரால் நிராகரிக்கப்பட்டதால் மத்திய குழுவின் பரிசீலனைக்கே வரவில்லை. இதுபுரியாமல் இழந்த ஒன்றுக்காக உங்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கின்றார்.

இது இப்படியிருக்க, ராகுல் ராவில் பதிவிட்ட இந்த முறைப்பாடு வெளியான சிறுது நேரத்தில் நடிகர் மம்முட்டியினால் அதற்கு பதில் பதிவு வெளியிடப்பட்டது. குறித்த மம்முட்டியின் பதிவில் “மன்னித்துக் கொள்ளுங்கள் சார். இது பற்றி எனக்குத் தெரியாது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்து தனது ரசிகர்களின் செயலுக்காக மனம் வருந்திக்கொண்டார் நடிகர் மம்முட்டி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top