Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
திரைக்கு வராமல் ஒதுங்கிக் கிடக்கும் கேரளத்துச் சிட்டு - சிக்கலுக்கு காரணம் என்ன.......???

Sooriyan Gossip - திரைக்கு வராமல் ஒதுங்கிக் கிடக்கும் கேரளத்துச் சிட்டு - சிக்கலுக்கு காரணம் என்ன.......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

446 Views
மலையாளத்து திரைப்படம் மூலம் திரைத்துறையில் கால் பதித்து, கேரளத்திலிருந்து இறக்குமதியாகி "கும்கி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இளசுகளின் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகை லக்ஷ்மி மேனன்.

தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வாங்கிக் கொடுத்த "சுந்தரபாண்டியன்" திரைப்படம் முதல் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த "ரெக்க" திரைப்படம் உட்பட பல படங்களில் நடித்த நடிகை லக்ஷ்மி மேனன், தற்போது சில காலமாக எந்த வித படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகவில்லை. அது மட்டுமல்லாமல், அவரை ரசிகர்கள் மறந்துவிடும் அளவிற்கு லக்ஷ்மி மேனன் பற்றிய செய்திகளும் பெரிதாக வெளிவருவதில்லை.

இந்தநிலையில், திரைத்துறையில் தலை காட்டாமல் இருக்கும் நடிகை லக்ஷ்மி மேனனை தேடிப்பிடித்து சந்தித்து இது பற்றி அவரிடமே கேட்டபோது, "நிறைய கதைகள் வந்தன. ஆனா, எந்தக் கதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி இல்லை. ஏதோ கதைகள் வருது; படம் பண்ணலாம்னு நினைக்கிற ஹீரோயின் நான் இல்லை. சில மாதங்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கிறது உண்மைதான். கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். இந்த பிரேக் நல்லாயிருக்கு. இப்போ தேவைப்படுற ஒண்ணாவும் இருக்கு.

எனக்கு நடனம் பிடிக்கும். அதைப் பற்றிதான் படிச்சேன். என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நடனம் பற்றி புதுப்புது வி‌ஷயங்களைக் கத்துக்கிட்டுதான் இருப்பேன். வீட்டிலேயே நான் சில குழந்தைகளுக்கு நடன வகுப்பு எடுத்துக்கிட்டிருக்கேன். என்னோட மாணவர்களின் அரங்கேற்ற நிகழ்ச்சியை பார்க்கணும்னு ஆசைப்படுறேன்" என்று மனம் திறந்தார் இந்த கேரளத்துச் சிட்டு
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top