Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
13
நிராகரித்த தமிழ் இயக்குனர்கள் - பந்தா காட்டும் வித்யா பாலன்.

Sooriyan Gossip - நிராகரித்த தமிழ் இயக்குனர்கள் - பந்தா காட்டும் வித்யா பாலன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

987 Views
'பொலிவூட்' எனப்படும் ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் திரையுலகிலிருந்து தேடி வந்த பல திரைப்பட வாய்ப்புக்களை தவிர்த்துக்கொண்டவர் நடிகை வித்யா பாலன்.

இருந்தும், 'தல' அஜித் நடிப்பில் அண்மையில் திரைக்கண்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் ஒருவாறு நடித்து நல்ல பெயரையும் தனதாக்கிக்கொண்டுள்ளார் நடிகை வித்யா பாலன். இந்தப் படம் நடிகை வித்யா பாலனின் நெருங்கிய தோழியான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பு என்பதாலேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்திருக்கின்றார் வித்யா பாலன்.

இந்தநிலையில், தமிழ்ப் படங்களில் நடிப்பதற்கு நடிகை வித்யா பாலன் ஏன் ஒப்புக்கொள்வதில்லை என்று அவரிடம் கேட்டபோது, "ஆரம்பத்தில் மாதவனுடன் "ரன்" திரைப்படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப்பட்டேன். அத்துடன், "மனசெல்லாம்" திரைப்படத்திலும் நடிப்பதற்கான தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் வாய்ப்பு மறுதலிக்கப்பட்டபோது மனம் உடைந்து விட்டேன். ஆனால், பின்னர் பொலிவூட்டில் அறிமுகமாகி எனது கேரியர் மாறியது.

'சூப்பர்ஸ்டார்' ரஜினி நடிப்பில் வெளிவந்த "கபாலி" படத்தின் வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த வாய்ப்பு கிடைத்தவேளையில் நான் பொலிவூட் படமொன்றில் பிசியாக இருந்ததால் "கபாலி" திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருந்தும், நான் தற்போது நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை படத்தில் எனக்கு கௌரவவேடம் என்றாலும் நல்லதொரு படக்குழுவினருடன் சேர்ந்து வேலை செய்தது மகிழ்ச்சியாகவுள்ளது. எப்போதும் மறக்க முடியாத விஷயமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் பற்றி முக்கியமாக சொல்லவேண்டுமென்றால் மிகவும் எளிமையானதொரு நடிகர் அவர்" என்கிறார் நடிகை வித்யா பாலன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top