Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
16
மீண்டும் ஜொலிப்பாரா நடிகர் பிரசாந்த்.....??? - மீண்டும் ரிஸ்க் எடுக்கும் தியாகராஜன்.

Sooriyan Gossip - மீண்டும் ஜொலிப்பாரா நடிகர் பிரசாந்த்.....??? - மீண்டும் ரிஸ்க் எடுக்கும் தியாகராஜன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,799 Views
ரசிகைகளின் மனம் கவர்ந்த 'Chocolate Boy' ஆக திரையில் வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். திரைத்துறைப் பின்னணியை கொண்டு திரைத்துறைக்குள் கால் பதித்திருந்தாலும் ஒரு காலத்தில் சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கொரு தனியிடம் வைத்திருந்த பிரஷாந்திற்கு, அண்மைக்காலமாக அவரது படங்கள் சோபிக்கத் தவறிவிடுகின்றன.

சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்தாவது பழையபடி தனது மகனை திரைவானில் மின்னவைக்கும் முயற்சியில் நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் எவ்வளவோ முயற்சியும், முதலீடும் செய்து நட்டமடைந்து போனாலும் தனது மகனுக்காக மேலும் மேலும் ரிஸ்க் எடுக்க தயங்குவது இல்லை. இந்தநிலையில், மீண்டும் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும், அதில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைக்கவும் முடிவெடுத்து களமிறங்கியுள்ளார் தியாகராஜன்.

பொலிவூட்டில் தயாராகி ஹிந்தி மற்றும் சீன ரசிகர்களினது அதீத வரவேற்பையும், பல விருதுகளையும், பெரும் வசூலையும் தனதாக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் "அந்தாதுன்" என்ற திரைப்படமே தமிழில் மீளுருவாக்கப்பட்டு நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை வெற்றிகொண்டுள்ள நிலையில் தமிழிலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப்பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த திரைப்படம்.

திரையுலகில் நடிகர் பிரசாந்த்திற்கு ஒரு திருப்புமுனையை இந்தத் திரைப்படம் ஏற்படுத்திக்கொடுக்கும் என்று முழுமையாக நம்பும் தியாகராஜன், படம் பற்றிக் குறிப்பிடுகையில் " 'அந்தாதுன்' படத்தின் திரைக்கதையானது ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்தப் படத்தின் கதாபாத்திரம் அவருக்கு மிகப் பொருத்தமாக அமையும்" என்கிறார்.

பிரசாந்த் நடிப்பில் மீளுருவாக்கம் செய்யப்படும் இந்தப் படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர் தேர்வு தற்போது நடைபெற்றுவரும் நிலையில், இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்பட்டவுடன், ஏனைய பாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வை இயக்குனர் மேற்கொள்வார் என்கின்றது தயாரிப்புக்குழு. மிக விரைவில் படமாகவிருக்கும் இதற்கான தமிழ் தலைப்பு இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top