Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
தினமும் காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...

SooriyanFM Gossip - தினமும் காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,958 Views
Ear Bats பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்களும் பெரியவர்களும் சொன்னாலும்கூட உபயோகித்துப் பழகியவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை. பட்ஸ்' பயன்படுத்திய ஒருவரது மண்டை ஓடே அரிக்கப்பட்ட சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 37 வயதுப் பெண் ஜாஸ்மின். அவர் காதைச் சுத்தப்படுத்த தினமும் `பட்ஸ்' பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் இரவுநேரத்தில் காட்டன் பட்ஸ் மூலம் காதைச் சுத்தப்படுத்தினால்தான் அவருக்குத் தூக்கம் வரும் என்றொரு நிலை.

இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக அவருக்கு இருந்திருக்கிறது ஒரு கட்டத்தில் அவரது இடது காது கேட்பதில் பிரச்னை ஏற்பட்டது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது, காதில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொடுத்தார் மருத்துவர். ஆனால் ஜாஸ்மினுக்கு காது கேட்கும் திறனில் ஏற்பட்ட குறைபாடு சரியாகவில்லை. 

ஆனாலும் `பட்ஸ்' பயன்படுத்தும் பழக்கத்தை அவரால் கைவிடமுடியவில்லை ஒருநாள் அவர் `பட்ஸ்' பயன்படுத்தியபோது அதில் ரத்தம் படிந்திருந்ததைப் பார்த்திருக்கிறார். உடனே, மீண்டும் மருத்துவரைச் சந்தித்திருக்கிறார். காது கேட்கும் திறன் அறியும் பரிசோதனையைச் செய்யச் சொன்னதுடன் காது, மூக்கு, தொண்டை நிபுணருக்குப் பரிந்துரைத்தார் அந்த மருத்துவர் காது, மூக்கு, தொண்டை நிபுணர் `சி.டி ஸ்கேன்' எடுக்கும்படி சொல்ல, அதன் முடிவில்தான் அவருக்கு ஏற்பட்ட பிரச்னையின் தீவிரம் வெளிப்பட்டிருக்கிறது. 

தொடர்ச்சியாக `பட்ஸ்' பயன்படுத்தியதால் அவரது காதில் பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டு, அது காதுக்குப் பின்னால் இருக்கும் மண்டை ஓட்டை அரித்திருக்கிறது. `ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் என்னை அணுகியிருக்க வேண்டும்' என்று ஸ்கேன் முடிவைப் பார்த்த மருத்துவர் அந்தப் பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நோய்த்தொற்று ஏற்பட்டு மண்டை ஓடு அரிக்கத் தொடங்கி, தற்போது அது தீவிரமாகியிருக்கிறது. உடனடியாக ஜாஸ்மினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

காட்டன் பட்ஸில் காணப்பட்ட நார்கள் காதின் உள்ளே தங்கியிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தியுள்ளன. ஜாஸ்மினுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்து தீர்வு காணப்பட்டாலும், அவரது இடது காது கேட்கும் திறனை முற்றிலும் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கண்களில் பார்வைத்திறன் குறைந்தால் அதை மீட்டெடுத்துவிட முடியும். ஆனால் காதுகளில் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதை சிகிச்சைமூலம் மீட்டெடுக்க முடியாது. அதனால் காது குடைய பட்ஸ்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதுதான் நல்லது
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top