Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
'அங்காடித்தெரு' தந்த வாய்ப்பு – மீண்டுமொரு புதிய படத்தில் கதாநாயகனாகின்றார் மகேஷ்.

SooriyanFM Gossip - 'அங்காடித்தெரு' தந்த வாய்ப்பு – மீண்டுமொரு புதிய படத்தில் கதாநாயகனாகின்றார் மகேஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

481 Views
நிஜமான வாழ்வியலின் சில கசப்பான உண்மைகளை திரையில் கொண்டு வரும் தைரியம் ஒரு சில இயக்குநர்களுக்கே உள்ளது எனலாம். இயக்குனர் மட்டுமல்லாது தயாரிப்புத் தரப்பும் மனது வைத்தால் மட்டுமே இப்படியான படங்கள் திரை காணும். காரணம், அதிகார, பண பலமிக்க முதலாளித்துவம் அவர்களது படைப்புக்களை முடக்கிப்போட்டு முதலுக்கே மோசத்தை உண்டு பண்ணிவிடும் என்ற பயம் தான்.
இப்படியான பயம் கடந்து, சென்னையின் மிகப் பிரபலமிக்க புடவை விற்பனை நிறுவனத்தின் பின்புலத்தில் அங்குள்ள தொழிலாளர்களின் துன்பகரமான வேதனை மிகுந்த வாழ்வியலை கூறும் மிக நேர்த்தியான திரைக்காவியமாக வந்து பெரும் வெற்றி பெற்றது "அங்காடித்தெரு" திரைப்படம்.

இந்தப் படத்தில் நடித்த புதுமுக நடிகர்களின் நடிப்பும் ரசிகர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களுக்கு வேறு பல படவாய்ப்புகள் தொடர்ச்சியாக கைகூடுகின்றன. 

இந்தநிலையில், "அங்காடித்தெரு" படத்தில் நடித்திருந்த நடிகர்களில் ஒருவரான மகேஷ், தற்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை தனதாக்கியுள்ளார். "தேனாம்பேட்டை மகேஷ்" என்ற பெயரில் வரவிருக்கும் இந்தப் படத்தை M.சித்திக் இயக்கவுள்ள நிலையில்,கதாநாயகியாக "பிச்சுவாகத்தி" திரைப்படத்தில் நடித்த நடிகை அனிஷா ஒப்பந்தமாகியுள்ளார். GSM பிலிம்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பூர்வீகன் "தேனாம்பேட்டை மகேஷ்" படத்தை திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். 

"தேனாம்பேட்டை மகேஷ்" திரைப்படத்தின் இயக்குனர் எம்.சித்திக் இந்தப் படம் பற்றிக் கூறுகையில், "எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என ஆரம்பத்தில் இருக்கும் மகேஷை எப்போதும் திட்டிக் கொண்டிருப்பார் அவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்று திரைக்கதையை அமைத்திருக்கின்றேன். நடிகர் மகேஷ் குடிநீர் போத்தல் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். 

இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியிருக்கின்றோம்" என்கிறார் இயக்குனர் M.சித்திக்
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top