Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
அமேசனில் மழை பொழியட்டும் ; அனைவரும் பிரார்த்தியுங்கள் - விவேக் உருக்கம்

SooriyanFM Gossip - அமேசனில் மழை பொழியட்டும் ; அனைவரும் பிரார்த்தியுங்கள் - விவேக் உருக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

369 Views
அமேசன் காட்டின் தீயை அணைக்க மழையின் உதவிக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசன் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசன் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

அமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இது சர்வதேச நாடுகளை அதிர்வின் உச்சத்துக்கு தள்ளியுள்ளது. 

இந்நிலையில், குறித்த தீயினால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அந்நாட்டு ராணுவத்தை அனுப்பி உள்ளது.

சர்வதேச தலைவர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் அமேசன் காட்டின் தீயை அணைக்க, வருண பகவானின் உதவிக்காக பிரார்த்திப்போம் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நடிகர் விவேக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

நம்மால் அமேசன் காட்டில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. ஆனால் அமேசனில் பொருட்கள் வாங்கவும், அமேசான் பிரைம் பார்க்கவும், ஆர்டர் போடவும் மட்டும் தான் தெரியும். எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நேரத்தில் ஒன்றை மட்டும்தான் செய்ய முடியும். அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுற்றிலும் மரங்களை நடவு செய்வதன் மூலம் நம் இடங்களை அமேசன்களாக மாற்ற முடியும்! அதே நேரம் அமேசான் காட்டின் தீயை அணைக்க மழையின் உதவிக்காக பிரார்த்தனை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top