Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
பாகிஸ்தான் ஆசிரியரின் கருணை உள்ளம் - கொண்டாடும் இந்தியர்கள்

Sooriyan Gossip - பாகிஸ்தான் ஆசிரியரின் கருணை உள்ளம் - கொண்டாடும் இந்தியர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
வெளிநாடு அனுப்புவதாக கூறி, ஐக்கிய அரபு எமிரேட்சில், ஏஜென்டால் ஏமாற்றப்பட்டு, ஆதரவற்று தவித்த, இரண்டு இந்தியர்களுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மனித நேயத்துடன் உதவியமையால்  இந்தியர்கள் மத்தியில் அவர் பாராட்டுக்களைப் பெற்று  வருகின்றார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த சிவகுமார், கேரளாவைச் சேர்ந்த முகமது உஸ்மான் ஆகியோர் இந்தியாவைச் சேர்ந்த, ஒரு ஏஜென்ட் மூலம், வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்கள்.

இந்தியப் பெறுமதிக்கு நபர் ஒருவருக்கு 7 லட்சம் ரூபா பணத்தை வாங்கிய அந்த ஏஜென்ட், அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தார்.

தாய்லாந்தில் வைத்து அவுஸ்திரேலிய, 'விசா' தரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.ஆனால், விசா எதுவும் கிடைக்காததால், விமான நிலையத்திலேயே காத்திருந்த அவர்கள், மீண்டும் இந்தியா திரும்பினர். அதன் பின், அவர்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக, அந்த ஏஜென்ட் கூறி இருக்கின்றார்.

மீண்டும் ஒரு பயணம் மேற்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வந்த அவர்கள், நிராதரவாக தவித்தனர். அங்கு பல நாட்களாக காத்திருந்தும், ஆஸ்திரேலிய விசா, அவர்களுக்கு கிடைக்கவில்லை. பின்னர்தான், ஏஜென்டால், தாங்கள் ஏமாற்றப்பட்டமை அவர்களுக்கு தெரிய வந்தது.

கடந்த நான்கு மாதங்களாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, முகமது அசதுல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தில், அவர்கள் தங்கியிருந்தனர். அவர்களது பரிதாப நிலையை அறிந்த அசதுல்லா, இலவசமாக உணவும் அளித்தார். இதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களிடம் பேசி, சிவகுமார் மற்றும் முகமது உஸ்மான் ஆகிய இருவரையும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உதவும்படி கோரிக்கை விடுத்தார்.
 
ஐக்கிய அரபு எமிரேட்சில், சட்டவிரோதமாக வசிப்பது குற்றம் என்பதால், இருவரையும், விரைவிலேயே திருப்பி அனுப்ப உள்ளதாக, அசதுல்லா தெரிவித்தார்.

இதனிடையே அசதுல்லா, மத கல்வி போதிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top