Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
தொட்டில் ஆட்டுவதற்கு இயந்திரம் தயாரித்த விவசாயி

Sooriyan Gossip - தொட்டில் ஆட்டுவதற்கு இயந்திரம் தயாரித்த விவசாயிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

367 Views
குழந்தைகளை உறங்க வைக்கும் தொட்டிலை ஆட்டுவதற்கு, விவசாயி ஒருவர் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இந்த தொட்டில் ஆட்டும் இயந்திரத்திரத்தை உருவாக்கியவர் இந்தியாவின் புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே, கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய வீரமணி என்பவரே.
 
வீரமணி, புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உடையவர். ஒரு சமயம் இவரது வீட்டில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில், தண்ணீர் வற்றியுள்ளது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லை என்ற நிலையில், தன் வீட்டு ஓட்டில் விழும் மழை நீரை, குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று, பாழடைந்து கிடந்த கிணறு ஒன்றை சீரமைத்து, அதை தண்ணீர் தொட்டியாக மாற்றி, குறித்த கிணற்றில் மழை நீரை சேமித்து பயன்படுத்தியுள்ளார்.

மேலும் அண்மையில் தமிழகத்தை புரட்டிப்போட்ட 'கஜா' புயலில் சாய்ந்த தென்னை மரங்களை துண்டுகளாக வெட்டி, அழகிய நாற்காலிகள் செய்துள்ளார். மேலும் பழைய கலப்பை உள்ளிட்ட விவசாய கருவிகளை சேகரித்து வருகிறார்.

இவை மாத்திரமன்றி, இவரது மனைவிக்கு, சமீபத்தில், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை இரவு, பகலாக கவனிக்க முடியாமல்,மனைவி அவதிப்படுவதைக் கண்ட வீரமணி, தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

பழைய இரும்பு கடைக்கு சென்று, இரண்டு, 'வைப்பர் மோட்டார்' களை வாங்கி, தொட்டிலை ஆட்டும் இயந்திரத்தை வடிவமைத்தவர், வேகத்தை கட்டுப்படுத்த, மின்விசிறி ரெகுலேட்டரையும் இதில் இணைத்துள்ளார்.

இது எவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது என்றால், பஸ், லொரியின் கண்ணாடிகளில் விழும் மழை நீரை, துடைக்கப் பயன்படும் வைப்பர் மோட்டாரில், வேகத்தை கட்டுப்படுத்த, ரெகுலேட்டரை இணைத்து, சுவிட்ச் வைக்கப்பட்டு உள்ளது. தொட்டில் கயிற்றை, வைப்பர் மோட்டாரில் உள்ள வளையத்தில் மாட்டிய பின், தொட்டிலில் குழந்தையை படுக்க வைத்து, சுவிட்சை போட்டு, தொட்டிலை மெதுவாக தள்ளி விட்டால், தொட்டில், 2 அடி வரை, முன்னும், பின்னுமாக ஆடும். ரெகுலேட்டரில் வேகத்தை அதிகப்படுத்தினால், வேகமாக தொட்டில் இயங்கும். இதை, 3,000 ரூபாயில் வீரமணி தயாரித்துள்ளார்.''

இந்த நிலையில் தொட்டில் ஆட்டும் இயந்திர உருவாக்கம் தொடர்பில் வீரமணி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
என் மனைவிக்கு, சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை துாங்க வைக்க, மனைவி பட்ட சிரமத்தை குறைக்க, இந்த இயந்திரத்தை உருவாக்கினேன். இதேபோல, என் நண்பர்களின் குழந்தைகளுக்கும் தொட்டில் செய்து கொடுத்துள்ளளேன் என்று , அவர் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top