Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
28
தளபதிக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் !!

SooriyanFM Gossip - தளபதிக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

383 Views
விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி அன்று வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து, நடிகர் விஜய் தனது 64-வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இத்திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக படத்தின் இயக்குனர் விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்படுகிறது.

எனினும், கால்சீட்டை பொறுத்து படத்தில் நடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக "பேட்ட" திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top