Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
29
இன்று நிழல் இல்லாத நாள்!

SooriyanFM Gossip - இன்று நிழல் இல்லாத நாள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

345 Views
ராமேஸ்வரம் கடலோரப் பகுதியில் இன்றைய தினம் நிழல் இல்லாத நாளாகக் கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ஒரு வருடத்தில் குறிப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சூரியன் எங்கள் தலைக்கு மேல் இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நமது காலடியில் இருக்கும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம்முடைய கண்களுக்கு அது தெரியாது, தெரிய வாய்ப்பும் இல்லை. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் அதாவது Zero shadow என கூறுகின்றனர்.

எனவே சூரியன் செங்குத்தாக இருக்கும்போது, நிழல் பூஜ்ஜியமாக மாறும் நாளினைத் தான்,நிழல் இல்லாத நாள் என சொல்லப்படுகிறது.

ஆனால், எல்லா இடங்களிலும் இவ்வாறு ஒரே நாளில் நிழல் இல்லாத நாள் வருவதில்லை. அந்தந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் தான் இவ்வாறு நிகழும். சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை தான் இவ்வாறு நிகழும்.

அந்தவகையில் இன்றைய தினம் ராமேசுவரம் கடலோரப் பகுதிகளில் நிழல் இல்லாத நாள் தோன்றுகிறது. சரியாக நண்பகல் 12.14 க்கு சூரியன் நடு உச்சத்தில் இருக்கும் போது நிழல் இல்லாத நேரம் ஏற்படுகிறது எனவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top