இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பிரபலமிக்கவர்கள் பலரதும் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும் நிலையில், பட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவின் வரலாறும் படமாகவுள்ளது.
இந்தநிலையில், அண்மையில் தனது விளையாட்டுத்துறை சார்ந்த ஒரு கேள்விக்கு பி.வி.சிந்து பதிலளிக்கையில், "பேட்மிண்டன் தரவரிசையில் விரைவில் முதலிடத்தை பிடிப்பேன் என்று நம்புகிறேன். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக என்னை பார்க்க ஆசைப்படுகிறேன். ஆனால் தரவரிசை குறித்து சிந்திப்பதை விட, இன்னும் நிறைய தொடர்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். போட்டிகளில் அசத்தினால், சிறந்த தரவரிசை தானாகவே கிடைக்கும்" என்று கூறினார்.
தரவரிசையில் தற்போது 5வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள பி.வி.சிந்து, தரவரிசைப் பட்டியலில் அதிகபட்சமாக 2வது இடத்திற்கு முன்னேறியவர் என்பதுடன், உலக பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.