Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
"பாஹுபலி 3" திரைப்படம் தொடர்பில் பிரபாஸ் சொல்வதென்ன.....???

SooriyanFM Gossip - "பாஹுபலி 3" திரைப்படம் தொடர்பில் பிரபாஸ் சொல்வதென்ன.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

481 Views
"பாஹுபலி" திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரைப்பட ரசிகர்களிடமும் அறிமுகம் பெற்று பிரபலமானவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிய நடிகர் பிரபாஸுக்கு திரைத்துறையில் ஒரு திருப்புமுனையை இயக்குனர் ராஜமௌலி கொடுத்துவிட, மீண்டுமொரு பிரம்மாண்ட பொருட்செலவில் பிரபாஸ் நடிக்க திரைகாண்கின்றது "சாஹோ" திரைப்படம்.
தெலுங்குத் திரைப்பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாகியிருக்கும் "சாஹோ" திரைப்படம் இன்றையதினம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகின்றது. இந்திய ரூபா பண மதிப்பில் 300கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 2வது பெரிய பட்ஜெட் படமாக அமைந்துள்ளது.

இந்தநிலையில், "சாஹோ" திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான விளம்பர நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டிருந்த நடிகர் பிரபாஸ், நேற்றையதினம் பங்கேற்ற ஒரு விழாவில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார். அந்தவேளையில், "பாஹுபலி" திரைப்படத்தின் மூன்றாம் பாகம் திரைப்படமாக உருவாகுமா....? அதில் நீங்கள் நடிப்பீர்களா...? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கேள்விக்கு பிரபாஸ் பதிலளிக்கையில், "பாஹுபலி 3" படத்தை இயக்குனர் ராஜமவுலி படமாக்க நினைத்தால் அதற்கு அவர் ஆர்வத்துடன் செயல்படுவார். அவர் என்னிடம் இதுவரை 6 கதைகளைத் தான் கூறியுள்ளார். அப்படியென்றால் அவரிடம் 10 தொடக்கம் 14 கதைகள் இருக்கும். ஐந்து வருடங்களாக ஒரு கதையை மனதில் வைத்திருந்தார் என்பது தெரியும். ஆனால் "பாகுபலி 3" திரைப்படம் சாத்தியமா....இல்லையா? என்று எனக்குத் தெரியாது.

இருந்தும், என்னைப் பொறுத்தவரையில் "பாஹுபலி" திரைப்படத்தில் நான் ஏற்ற 'அமரேந்திர பாகுபலி', 'மகேந்திர பாகுபலி' கதாபாத்திரங்களை என் உடலில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது" என்று கூறினார். இதன்மூலம், நடிகர் பிரபாஸ் எந்த வேளையிலும் "பாஹுபலி 3" திரைப்படத்தில் தான் நடிக்க தயாராகவே உள்ளமையை இயக்குனருக்கு மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றனர் பிரபாஸுக்கு நெருக்கமானவர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top