Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
மகிழுந்து விபத்தில் பலியான பிரபல படப்பிடிப்பாளர் சிவா - கவலையில் கோடம்பாக்கம்.

Sooriyan Gossip - மகிழுந்து விபத்தில் பலியான பிரபல படப்பிடிப்பாளர் சிவா - கவலையில் கோடம்பாக்கம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

981 Views
தமிழ்நாடு தேனி மாவட்டம் உத்தமபாளையப் பிரதேசத்தின்  கோம்பை பகுதில் நடந்த மகிழுந்து விபத்து ஒன்று தமிழ்த் திரையுலகை இன்றையதினம் துயரத்துக்குள் தள்ளியுள்ளது.
தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் பிரபல திரைப்பட படப்பிடிப்பாளர் ஒருவர் ஸ்தலத்திலேயே உடல் நசுங்கிப் பலியானதுடன், மற்றுமொரு திரைத்துறை நடிகர் படுகாயங்களுக்கு உள்ளாகி, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தமபாளையம் கோம்பை மலையடிவாரப் பகுதியில் சில வாரங்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பில் பல நடிகர்கள், தொழில்நுட்ப மற்றும் படப்பிடிப்புத்துறை சார்ந்த பலரும் பங்கேற்றுவரும் வந்தநிலையில், நேற்றையதினம் நடைபெறவிருந்த படப்பிடிப்பு நிகழ்வில் பங்கேற்க வந்த நடிகரான தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியை சேர்ந்த 59 வயதான நடிகர் தவசி விபத்தில் சிக்கிய மகிழுந்தை செலுத்திய நிலையில் அவர் படுகாயமடைந்துள்ளதுடன், அவருடன் ஒன்றாகப் பயணித்த படப்பிடிப்பாளர் சிவா பலியானார்.

படுகாயமடைந்த நடிகர் தவசி "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "கொம்பன்", "பருத்திவீரன்" போன்ற பல படங்களில் நடித்து தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடம் நல்ல அறிமுகமுள்ளவர். அத்துடன், இந்த விபத்தில் பலியான 55 வயதான திரைப்படப் படப்பிடிப்பாளர் சிவா 'தல' அஜித், 'தளபதி' விஜய் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரின் திரைப்படங்களில் படப்பிடிப்பாளராக பணியாற்றியவர் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top