Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
03
தன்னை மருத்துவர் என்று சொல்லும் இவர் யார்?

Gossip News - தன்னை மருத்துவர் என்று சொல்லும் இவர் யார்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
எங்களின் நடை உடை பாவனைக்கு மேலதிகமாக தற்போதைய நாட்களில் அதி நவ நாகரியமாக  ஆடைகளை உடுத்திக்கொள்வது, எடுத்தது எல்லாவற்றிக்கும் மேக்கப் செய்வது, தலைக்கு பல நிறங்களில் வர்ணம் பூசுதல்,   டட்டூ குத்துதல் என்று நாம் எங்கையோ சென்றுகொண்டு இருக்கின்றோம்.

நாம் செய்யும் இந்த நடவடிக்கைகளால் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை இலகுவில் தீர்மானித்துக்கொள்ள முடியும். ஒருவரின் நடை உடை பாவனையில் அவர் எப்படியான நடத்தையை கொண்டுள்ளார் என்பதை அறிந்துகொள்கின்றோம்.
 
நீங்கள் அதிப்படியான ஒப்பனை செய்திருந்தால் உங்கள் முக்கிய பணி "புத்திசாலித்தனமான" ஒன்றாக நிச்சயம் இருக்க முடியாது என கருதப்படுகிறது. அல்லது உங்கள் உடலில் அதிகமான பச்சை குத்தல்கள் இருந்தால், நீங்கள் ஒரு நவநாகரீக கலாச்சார விரும்பியே தவிர வேறொன்றுமில்லை. இது தேவைதானா? என்று பலரும் புலம்புவதை நாம் அவதானிக்காமல் இல்லை.

இப்படி இத்தனை விடயங்கள் தொடர்பிலும் நமக்கு தெரிந்தாலும், நியூயோர்க் நகரத்திலிருந்து இஸ்ரேலுக்கான விமானத்தில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் 'கவர்ச்சியான மருத்துவர்' தொடர்பில் சில தகவல்கள் கசிந்துள்ளன.

ஆஸ்திரேலியாவை சொந்த நாடாக கொண்ட இந்த மருத்துவர் இதுபோன்ற மரபுகளை உடைக்க தன்னைத்தானே எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகின்றது.

"அவுஸ்திரேலியாவின் மிகவும் பச்சை குத்தப்பட்ட மருத்துவர்" என்றும் அழைக்கப்படும், Dr Sarah Gray என அறியப்படும் இவர், Instagram-ல் rosesarered_23 என்ற கணக்கின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

அறுவை சிகிச்சை பயிற்சியாளராக பணிபுரியும் இவருக்கு, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது, அவர் நிறைவேற்றவேண்டிய ஆசை. 31 வயதான இவர் முன்னாள் மிஸ் அவுஸ்திரேலியாவாகவும், பட்டம் பெற்றிருக்கின்றார்.

இவரது புகைப்படங்கள் பல காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகளை உடைத்தெறியும் கருவிகள். ஏன் என்றால் இவரது புகைப்படங்களை பார்க்கும்போது அதிகளவிலான டட்டூக்குள் , மொடல் ஆடைகள் , தலைக்கு பல நிறங்களில் கலர்கள் என்று முற்றிலும் தான் செய்யும் தொழிலுக்கும், மிகுந்த வேறுபாட்டோடு தோன்றுகின்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top