Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
மீண்டும் ஒரு வர்த்தக எச்சரிக்கை சீனாவுக்கு!

Gossip News - மீண்டும் ஒரு வர்த்தக எச்சரிக்கை சீனாவுக்கு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views
அமெரிக்க அதிபர் ஒருமுறை ஜனாதிபதி ஆனதற்கே உலக நாடுகள் கதிகலங்கி நிட்கிறது. அதிலும் சீனா பெரும்
வர்த்தக போரையே சந்தித்து வருகிறது. இந்த நிலையில்  மீண்டும் அமெரிக்க அதிபராக தானே பதவி ஏற்றால், சீனாவின் வர்த்தக உடன்படிக்கை கடினம் தான் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையே ஒருவருடத்திற்கு மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை வெற்றி அடையாத காரணத்தால், நிலைமை மோசமாகியுள்ளது. அண்மையில், சீன உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரியை அதிகரித்தது.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒருவேளை தான் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியானால், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் கடினமானதாகி விடும் என ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “சீனாவுடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் சீனாவோ அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறது. ஆனால் அதுவரை காத்திருக்கும் பட்சத்தில், சீனாவின் வேலைவாய்ப்புகளும், நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஒருவேளை மீண்டும் நான் ஜனாதிபதியாக தேர்வாகும் பட்சத்தில், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது மிகவும் கடினமானதாகி விடும்” என குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top