Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
நயன்தாராவுக்கு நடிக்கத் தடை........???? - முடிவுக்கு வருமா முறுகல்.

Sooriyan Gossip - நயன்தாராவுக்கு நடிக்கத் தடை........???? - முடிவுக்கு வருமா முறுகல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,828 Views
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி பெண் நட்சத்திரமாக மின்னிக்கொண்டிருக்கும் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா, தனது திறமையின் மூலம் எப்போதும் திரையுலகின் பார்வையை தன் பக்கமாகத் திருப்பி வைத்திருக்கும் வித்தையை கற்றுத் தேறிய ஒரு நடிகை.

ஒப்பந்தமாகும் திரைப்படங்களில் சிறப்பாக நடித்துக் கொடுத்து, நயன்தாரா முதலுக்கு மோசமில்லாத சிறந்த நடிகையாக தயாரிப்பாளர்களால் எப்படி நோக்கப்படுகின்றாரோ அதேபோன்று ஒரு சில வேளைகளில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரின் எரிச்சலையும், அதிருப்தியையும் சம்பாதிக்கத் தவறுவதில்லை.

தற்போது தெலுங்குத் திரையுலகில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா நடித்த "சைரா நரசிம்ம ரெட்டி" திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையை வந்தடைந்திருக்கின்றது. இந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடையும்வரை சுமுகமாக இருந்த இந்தப் படத்தின் தயாரிப்பு தரப்புடனான நயன்தாராவின் உறவு, படம் வெளியீட்டை நெருங்கும் தருணத்தில் முரண்பட்டு நிற்கின்றது.

நடிகர் சிரஞ்சீவி நடிக்க, அவரது மகன் ராம் சரண் "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தை பல கோடி ரூபா பொருட்செலவில் செலவில் இப்படம் தயாரித்துள்ளார். இந்தப் படம் ஆரம்பிக்கப்படும் நேரத்தில் நடிகை நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்த வேளையிலேயே, பட வெளியீட்டு நேரத்தில் அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டு, அதற்கான சம்மதமும் நயன்தாராவிடமிருந்தது பெற்றுக்கொள்ளப்பட்டதாம்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் ராம் சரண் தற்போது "சைரா நரசிம்ம ரெட்டி" படத்தை அடுத்த மாதம் வெளியிடுவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதுடன், பெருந்தொகை முதலீடு செய்து எடுக்கப்பட்ட படம் என்பதன் காரணத்தினால், ஒப்பந்தம் செய்யும்போதே நயன்தாராவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதன்படி அவர் நிகழ்வில் பங்கெடுப்பதை உறுதி செய்வதற்கு ராம் சரணின் முகாமையாளர் நயன்தாராவை தொடர்புகொண்டபோது, நயனிடமிருந்து எதிர்பார்த்த வகையிலான முறையான பதில் கிடைக்கவில்லை.

இந்தநிலையில், தயாரிப்புத் தரப்பான நடிகர் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் ஆகியோருக்கு இந்த விடையம் தெரியவந்ததால், கடும் கோபத்தில் கொந்தளித்துபோயுள்ளனர் இருவரும். ஆனால், இது தொடர்பில் நயன்தாரா தனது பக்க நியாயமாக, எந்தத் திரைப்படமும் அதன் கதையை பொறுத்தே வெற்றி பெறுகிறது. விளம்பரப்படுத்தலின் மூலம் அல்ல என்று கூறி ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களின் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளார்.

நிலை இப்படியிருக்க, தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கத்திடம் இந்த விடையம் முறைப்பாடாகக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அப்படி முறைப்பாடு செய்யப்பட்டால் நயன்தாரா தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பதற்கு தடை கொண்டுவரப்படலாம் என்றும் திரைத்துறை தகவல்கள் சொல்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top