Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
05
மோல்ட்டாவிலும் உலக அதிசயம் - நீங்கள் அறியாத அரிய தகவல்

Sooriyan Gossip - மோல்ட்டாவிலும் உலக அதிசயம் - நீங்கள் அறியாத அரிய தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

375 Views
இது வரைக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவர் தொடர்பில் நாங்கள் நிறைய விடயங்களை அறிந்து வைத்து இருக்கின்றோம்.

விண்வெளியில் இருந்து பார்த்தாலும் கூட, ஒரு மெல்லிய கோடு போல தெரியக் கூடிய இந்த சீனப் பெருஞ்சுவருக்கே சவால் விடும் அளவுக்கு, தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள மோல்ட்டா, மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும்.
 
மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒன்று. அடுத்த 10 ஆண்டுகளில், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 6,700 பேர் வாழும் நாடாக இது மாறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதி தீவு நாட்டை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், "மோல்ட்டா பெருஞ்சுவர்" தொடர்பில் பல ஆண்டுகள் தெரியாமலேயே இருந்தது.
மோல்ட்டாவின் தீவின் வடக்கு பகுதி ழுழுவதும் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட நிலையில் ஓர் அற்புதமான எல்லை இருந்துள்ளதை நம்பமுடியவில்லை.

குறிப்பாக 12 கிலோமீட்டர் நீளத்தில் பல கோட்டை அரண்களின் வலையமைப்போடு மோல்ட்டா தீவின் வடக்கு பகுதி முழுவதும் இந்த "மோல்ட்டா பெருஞ்சுவர்" அமைந்துள்ளது. சீனப் பெருஞ்சுவருக்கு மோல்ட்டாவின் பதிலடியாக 19ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பிரிட்டன் படையால் கட்டப்பட்டதுதான் விக்டோரியா லைன்ஸ்.
 
இந்த வலையமைப்பில் கோட்டைகள், பீரங்கித்தொகுதிகள், நுழைவாயில்கள், உயரத்தில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தும் நிலைகள் மற்றும் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் தொடர்ச்சியான காலாட்படை தங்குமிடங்கள் ஆகியவை உள்ளன.

1800களில் ரோயல் பொறியியலாளர்களால் கட்டப்பட தொடங்கிய விக்டோரியா லைன்ஸ் பெருஞ்சுவர் , மகாராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டான 1897-ல் திறக்கப்பட்டது. இந்த பெருஞ்சுவர் கட்டப்பட முக்கிய காரணம் வர்த்தக ரீதியாக செல்லும் கப்பல்கள் அனைத்தும் ஆப்பிரிக்காவை சுற்றி செல்லாமல், தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்ல ஐரோப்பிய நாடுகளை அனுமதிக்கும் சூயஸ் கால்வாயை 1869ம் ஆண்டு பிரிட்டன் திறந்தது.

1907ம் ஆண்டு இது கைவிடப்பட்டதோடு, அங்கிருந்த படை துருப்புகள் தீவின் கடலோர பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது நாஜிக்கள் ஆக்கிரமிப்பின்போது, விக்டோரியா லைன்ஸ் பெருஞ்சுவர் புதுப்பிக்கப்பட்டது.

பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த விக்டோரியா லைன்ஸ் பெருஞ்சுவர் நிலைமை இனிமேல் மாறப்போகிறது.
இது மாபெரும் பிரபலம் ஏற்பட தொடங்கிய பின்னர்தான், தங்கள் நாட்டில் மகத்தான, கண்டுகொள்ளப்படாத பொக்கிஷம் இருக்கின்றது என மோல்ட்டா மக்கள் மற்றும் அரசாங்கம் விழிப்படைய தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இந்த இடத்தை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகம் செய்ய மோல்ட்டா நாட்டு சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top