Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
கொந்தளிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் - கைவிடப்படுமா, தமிழக அரசின் தீர்மானம்......?

Sooriyan Gossip - கொந்தளிக்கும் திரையரங்க உரிமையாளர்கள் - கைவிடப்படுமா, தமிழக அரசின் தீர்மானம்......?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

433 Views
திரைப்படங்களுக்கான பற்றுச்சீட்டுக் கட்டணங்களை சீர்ப்படுத்தி தமிழக அரசினால் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இணையவழி பற்றுச்சீட்டு பெறும் நடைமுறையை அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தமிழக மாநில அமைச்சர்கள் இந்த இணையவழி மூல திரையரங்கப் பதிவுகள் தொடர்பில் அடிக்கடி தமது கருத்துக்களை அவ்வப்போது பொதுவெளியில் வெளியிட்டு வருவதுடன், இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றமை தொடர்ந்து செல்கின்றது. ஆனால், தமிழக அரசின் இந்த நிலைப்பாடானது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கின்ற ஒரு விடையமாகியுள்ளது.

தமிழக அரசின் தற்போதைய திரையரங்க கட்டண நடைமுறையின்படி, மல்டி பிளக்ஸ் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு திரையரங்குகளுக்கு தனியான கட்டணமும், குளிரூட்டப்படாத மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட திரையரங்குகளுக்கு வேறொரு வகையான கட்டண முறையும் காணப்படுகின்றன. இந்தநிலையில், திரையரங்க பற்றுச்சீட்டு பெறுதலை ஒன்லைன் எனப்படும் இணையவழி மூலம் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, எல்லா திரையரங்குகளும் அதற்கு தமிழக அரசினால் வழங்கப்பட்டுள்ள கட்டண நடைமுறையை ஒழுங்காக பின்பற்றுகின்றனவா என்ற உண்மைநிலை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது.

இதனிடையே தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஒரு நாளில் எத்தனை நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையாகின...? எத்தனை காட்சிகள் ஒரு நாளில் காண்பிக்கப்பட்டன...? போன்ற விபரங்களை துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கு ஒன்லைன் மூலமான நுழைவுச் சீட்டு விற்பனையை நடைமுறைப்படுத்துவது பற்றி தமிழக மாநில அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது இப்படியிருக்க, அண்மையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தமிழக மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு, ஒன்லைன் மூலமான திரையரங்க நுழைவுச்சீட்டு விற்பனை முறையானது, தமிழ்த் திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் ஒரு நல்ல விடையம் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னுதாரணமாக அமைந்துள்ள இந்த திட்டமானது தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும் என்றும் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top