Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
நிலவின் தரைப்பகுதியில் சாய்ந்து கிடக்கும் விக்ரம் லாண்டர் - படம் பிடித்தது ஓபிட்டர்.

Sooriyan Gossip - நிலவின் தரைப்பகுதியில் சாய்ந்து கிடக்கும் விக்ரம் லாண்டர் - படம் பிடித்தது ஓபிட்டர்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
விஞ்ஞான தொழில்நுட்ப ஆராச்சியுலகில் அதிகம் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது, அண்மையில் நிலவின் தென்துருவத்துக்கு பயணம் மேற்கொண்ட இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் சந்திரயான்-2 திட்டத்தில் உருவான விக்ரம் லாண்டர்
இந்த நிலவுப் பயணத்தின் 95% வெற்றியைப் பெற்றுள்ளதாக பல உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க 2.1 கிலோமீட்டர் உயரத்தில் இருந்த நிலையில் இஸ்ரோவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டை இழந்த பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர், பின்னர் என்ன ஆனது என்று தெரியாத நிலையில் இஸ்ரோவின் விஞ்ஞானிகளை திகைக்க வைத்திருந்தது.

இந்தநிலையில், நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லாண்டர் கருவியை தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்த இடத்திற்கு அண்மையில், நிலவின் தரைப்பகுதியில் உடைந்து நொறுங்கி சேதமடையாமல், சாய்ந்த நிலையில் விக்ரம் லாண்டர் வீழ்ந்து கிடப்பதை ஓபிட்டர் கருவியின் கமெரா மூலம் கண்டறிந்துள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.


இது பற்றி இஸ்ரோ விண்வெளி ஆய்வுகூட அதிகாரி ஒருவர் கூறுகையில், விக்ரம் லாண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் தரை பகுதியை தொட்டு இருந்தால் அது சாய்ந்து இருக்காது என்றும், வேகமாக வந்ததால் அது சாய்ந்து விழுந்து இருக்கலாம் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். அத்துடன், லாண்டரில் உள்ள அன்டெனாக்கள் எனப்படும் உணர்கருவிகள்
ஓபிட்டரையோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தையோ நோக்கியதாக இருந்தால் மட்டுமே அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் எனவும், இல்லையெனில் விக்ரம் லாண்டருடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கிறார் அவர்.

இது இப்படியிருக்க, விக்ரம் லாண்டரின் வெளிப்புறப் பகுதியில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருப்பதாலும், லாண்டரின் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்கலங்கள் நல்ல நிலையில் இருக்கும் என்பதாலும், லாண்டரிற்கான போதிய மின்சாரம் கிடைப்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. அதேவேளை, ஓபிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா மூலம் விழுந்து கிடக்கும் லாண்டரை மிக துல்லியமாக படம் பிடிக்கவும் தீர்மானித்துள்ளோம். இதற்காக, தற்போது நிலவின் தரைப்பகுதியிலிருந்து 100 கிலோ மீற்றர் உயரத்தில் நிலவை சுற்றி வரும் ஓபிட்டரை , 50 கிலோமீட்டர் உயரத்திற்கு இன்னும் கீழிறக்குவது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top