Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
உச்ச நட்சத்திரங்களை இயக்க ஆசை - உலக நாயகனின் மகள் மனம் திறக்கிறார்.

Sooriyan Gossip - உச்ச நட்சத்திரங்களை இயக்க ஆசை - உலக நாயகனின் மகள் மனம் திறக்கிறார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

513 Views
'உலகநாயகன்' கமல்ஹாசனின் இளைய வாரிசாகவும், பெரும் பிரபல திரைப்பின்னணி கொண்டமைந்தும் இன்னமும் தன்னை திரைத்துறைக்குள் நிலைநிறுத்த முடியாமல் தள்ளாடிக்கொண்டிருப்பவர் நடிகை அக்‌ஷரா ஹாசன் .
கமலின் மூத்த மகளும், அக்‌ஷராவின் மூத்த சகோதரியுமான ஷ்ருதி ஹாசன் திரைத்துறையில் தன்னால் முடிந்த பல திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னமும் சோபிக்க முடியாமல் முன்னேற முயன்றுகொண்டிருக்கும் அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் திரைகண்டது "கடாரம் கொண்டான்" திரைப்படம். இந்தப் படமும் நடிகர் விக்ரமிற்கும் சரி, அக்‌ஷரா ஹாஷனிற்கும் சரி சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் நடிகை
அக்‌ஷரா ஹாசன் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, தனது திரைத்துறை சார்ந்ததும், தனிப்பட்டதுமான வாழ்க்கை பற்றி குறிப்பிடுகையில்," சினிமாவுக்கு வந்து 4 வருடங்களில் நான்கு படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறீர்களே? என்று கேட்கிறார்கள். நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை.

நடன கலைஞராக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறவில்லை. 4 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன்பிறகு எதிர்பாராமல் நடிகையாகிவிட்டேன். முடிந்தவரை நடிகையாகவே நீடிப்பேன். டைரக்டராக வேண்டும் என்றும் விருப்பம் உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் எனது அப்பா நடிக்கும் படங்களை இயக்க ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான அனுபவம் இல்லை. அதேநேரம், அப்பாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதிர்ஷ்டம். எனது தனிப்பட்ட சில படங்கள் லீக் ஆகிவிட்டன. கடந்த காலம் பற்றி பேசுவதில் பிரயோஜனம் இல்லை. நாம் சரியாக இருந்தாலும் சில நேரம் தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் இந்த துறையில் இருக்கிறது. நம்மை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

நம்மை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கை. அதை சந்தோஷமாக கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட்டு வாழ முடியாது. அம்மா, அப்பா பிரிந்ததில் வருத்தம் இருக்கிறது. இந்த உலகமே மூழ்கி போனது போல் இருந்தது. எனக்கு இருவருமே முக்கியமானவர்கள்.” என்று மனம் திறந்து பதிலளித்தார் நடிகை அக்‌ஷரா ஹாசன்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top