Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
10
பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமீரா சலீமின் பாராட்டு

Sooriyan Gossip - பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமீரா சலீமின் பாராட்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

365 Views
'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு, பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனையான, நமீரா சலீம் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

''இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சி, நிலவு ஆராய்ச்சியில், தெற்காசியாவின் மாபெரும் பாய்ச்சல்,'' என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
 
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ'வைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சந்திரயான் - 2 விண்கலத்தை, அண்மையில் விண்ணில் செலுத்தினார்கள்.
 
குறித்த விண்கலத்தின் 95 சதவீத பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த, 'லேண்டர்' சாதனத்தை, நிலவில் மென்மையாக தரையிறக்கும் முயற்சியில், கடைசி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

லேண்டரிலிருந்து, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு, எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை. ஆனாலும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சிக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான, நாசா உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் பாகிஸ்தான், நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற, நமீரா சலீமும், தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை. நிலவு ஆராய்ச்சியில் தெற்காசியாவின் மிகப் பெரிய பாய்ச்சலாக இந்த முயற்சி கருதப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சி, தெற்காசிய பிராந்தியத்துக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்கும் பெருமை தரக் கூடியது. இணைக்கிறது வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டதற்காக, இந்திய அரசுக்கும், இஸ்ரோ விஞ்ஞானி களுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

விண்வெளி ஆய்வை எந்த நாடு வழி நடத்துகிறது என்பது முக்கியம்அல்ல. பூமியின் அரசியல் எல்லைகள் நம்மை பிரித்தாலும், விண்வெளி நம்மை இணைக்கிறது. இவ்வாறு, அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top