Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
சுபஸ்ரீயின் மரணம் - தி மு க எடுத்த முக்கிய முடிவு

Sooriyan Gossip - சுபஸ்ரீயின் மரணம் - தி மு க எடுத்த முக்கிய முடிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

282 Views
பொதுமக்களுக்கு இடையூறாகவும் அரசாங்க அனுமதி இன்றியும் விளம்பர பதாதைகள் உள்ளிட்ட பதாதைகளை வைக்க மாட்டோம் என்று, உயர்நீதிமன்றத்தில் திமுகவினர் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மாதம் 12ம் திகதி, 23 வயதுடைய சுபஸ்ரீ என்ற பெண் ஸ்கூடியில் சென்றுகொண்டு இருக்கும் போது, அவர் மீது வீதியின் நடுவே வைக்கப்பட்டிருந்த பதாகை ஒன்று விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அவர் பின்னால் வந்த லொரி ஒன்று அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், சுபஸ்ரீயின் இந்த பரிதாப மரணம் அனைவரையும் அதிரவைத்துள்ளது. இதன் காரணமாக பல தரப்பினரும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான பதாதை வைக்கப்பட்ட விதம் தொடர்பில் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
 
அத்துடன், விபத்திற்கு காரணமான பதாகையை தயார் செய்த ''சண்முகா டிஜிட்டல் பேனர்'' மற்றும் ''ஸ்டிக்கர்'' அச்சகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அங்கிருந்த பதாதைகள் உடனடியாக அகற்றப்பட்டன.

அத்துடன், சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமான பதாகையை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பதாகை விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக இந்தியப் பெறுமதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க, உத்தரவிட்டது.

மேலும், பதாகை வைத்தவர்களும் இடைக்கால நிவாரணம் தர வேண்டும். பதாகைகள் வைக்கக்கூடாது என்ற உத்தரவு முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை தலைமைச்செயலாளர் கண்காணிக்க வேண்டும். பதாதைகள் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை, பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம், என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக பதாதைகளை வைக்க மாட்டோம் என்று, திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பதாதைகள்,கட் அவுட்டுகள் வைக்க கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத பதாதைகள் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை திமுக தவறாமல் பின்பற்றும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top