Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
குடிக்கும் நீரில் இத்தனை விஷயங்களா.........??? - அறிவோம், ஆரோக்கியம் பெறுவோம்.

Sooriyan Gossip - குடிக்கும் நீரில் இத்தனை விஷயங்களா.........??? - அறிவோம், ஆரோக்கியம் பெறுவோம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
'நீரின்றி அமையாது இவ் உலகு' என்பது ஆன்றோர் வாக்கு. ஒவ்வொரு உயிரினமும் வாழ மூலாதாரமாக, இந்த உலகத்தின் இயங்குபொருளாக இருப்பது நீர். 
பூமியின் பெரும் பங்கு நீரால் சூழப்பட்டிருந்தாலும், மனித பயன்பாட்டுக்கு உகந்த நீர் மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், பூமியில் மனிதனின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடானது பல நாடுகளிலும் பூதாகரமான பிரச்சனையாக மாறியுள்ளது. இந்தநிலையில், எமக்கு கிடைக்கும் குடிநீரை விரயமாக்காமல் சிறப்பானதும், ஆரோக்கியமானதுமான முறையில் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

எந்தவித பாதிப்புக்களும் பக்கவிளைவுகளும் இல்லாமல், சுத்தமான குளிர்ந்த குடிநீரைப் பருக விரும்புபவர்கள், மண்பானையில் தண்ணீரை சேமித்து வைத்துப் பருகலாம். இந்த நீர் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு, இயற்கையாகவே நீரை சுத்திகரிக்கும் திறனும் மண்பானைக்கு உண்டு.

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வோட்டர் பில்டர்’ எனப்படும் நீர் சுத்திகரிப்பான் என்பதே உண்மை.

புதிய மண்பானை ஒன்றை நாம் வாங்கினால், வாங்கியவுடன் நாம் அந்தப் பானையை கழுவிவிட்டு முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஆறு அல்லது ஏழு நாட்கள் வரை தண்ணீரை பானையில் ஊற்றி தினசரி அந்த நீரை மாற்ற வேண்டும். அதன் பின்னர் குறித்த மண்பானையில் ஊற்றி வசிக்கும் நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

அதேவேளை, செப்பு குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தண்ணீரை ஊற்றி வைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து தண்ணீரை சுத்தப்படுத்தலாம். அத்துடன், நீரைக் கொதிக்கவைத்த பின்னர் நெல்லிக்கனிகளையும், சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரைக் கொதிக்கவைக்கும்போதே சீரகத்தையும் போட்டு கொதிக்க வைக்கலாம். நெல்லிக்காய் ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண் சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும்.

தேற்றான் விதைகளையும் நீரில் நன்றாக கழிவியபின் குடிநீர் பானையில் போட்டு வைக்கலாம். தேற்றான் விதை ஊறிய நீரானது மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ, குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் விதையை பொடிசெய்து போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை, தேற்றான் விதை பொடியானது நீர் சேகரித்து வைத்திருக்கும் பானையின் அடிப்பாகத்தில் படிந்துகொள்ள செய்துவிடும்.

அதேவேளை, வெட்டிவேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, ஏலம், அதிமதுரம் போன்றவற்றை நாம் குடிக்கும் நீரில் போட்டு நன்றாகக் கொதிக்கவைத்து அந்த நீரைத் தினமும் பயன்படுத்தினால், தண்ணீரில் மருத்துவக் குணம் அதிகரிப்பதோடு நீருக்குச் சுவையும் கிடைக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top