Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
நயன்தாராவுக்கு டிசம்பரில் 'டும் டும் டும்....... ??? - கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.

Sooriyan Gossip - நயன்தாராவுக்கு டிசம்பரில் 'டும் டும் டும்....... ??? - கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

510 Views
'லேடி சூப்பர்ஸ்டார்' என தமிழ்த் திரையுலகம் கொண்டாடும் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான், அண்மைய நாட்களில் கோடம்பாக்கம் தொடக்கம் தமிழ்த் திரையுலக ரசிகர்கள் வரைக்குமான பேசுபொருளாக மாறியுள்ளனர்.  
சில நாட்களுக்கு முன்னர் இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இந்தப் பிறந்தநாளை மிகச் சிறப்பாக ஒழுங்கமைத்ததே நயன்தாரா தான் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். நண்பர்களை அழைத்து பிறந்தநாளை கொண்டாடித் தீர்த்திருக்கின்றாராம் நயன்தாரா.

தற்போது சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாக பரவிவரும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டப் படங்களை இன்னும் இன்னும் பகிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர் நயன் ரசிகர்கள். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இட்ட பதிவில், “நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை. இது ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாள்” என மனமுருகியுள்ளார்.

இது இப்படியிருக்க, நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியடையாததால், தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் படம் வெளியீட்டிற்குத் தயாரானதும், நயனும் இல்லற வாழ்வுக்குள் நுழைய முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போது நயன்தாரா நடிப்பில் "நெற்றிக்கண்" என்ற திரைப்படம் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்திற்கு தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனை தயாரிப்பாளராக்கி, அவரை அடுத்த கட்டத்திற்கு முன்கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் நடிகை நயன்தாரா.


இவர்களது காதல் வாழ்க்கை இப்படியே சந்தோசமாக சென்றுக்கொண்டிருக்க, எதிர்வரும் டிசம்பர் மாதம் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தமது திருமணம் தொடர்பில் இருவரும் விரைவில் தெரியப்படுத்தவுள்ளனர் என்றும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top