Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி

Gossip News - உலகின் சிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

287 Views
சர்வதேச கால்பந்து சங்கமான ''பிபா'',  வருடா வருடம் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.

தேசிய அணிகளின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கால்பந்து பத்திரிகையாளர், பிரதிநிதிகள் ஆகியோர் இந்த விருதுகளுக்கு தகுதியான வீரர்களுக்கு வாக்களித்து, விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
 
இந்தநிலையில், நடப்பாண்டுக்கான "FIFA 2019 '' விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் லயோனல் மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, விர்ஜில் வான் டிஜிக் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற லிவர்பூல் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவரும், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் சிறந்த வீரர் விருதை பெற்றவருமான விர்ஜில் வான் டிஜிக் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும், 46 வாக்குகள் பெற்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர நாயகன் மெஸ்சி, சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.

2016-ம் ஆண்டு முதல் ‘'FIFA '’ சிறந்த வீரர் விருதை தனியாக வழங்கத் தொடங்கிய பின்னர், மெஸ்சி முதல்முறையாக இந்த விருதை பெற்றுள்ளார்.

பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் 32 வயதான மெஸ்சி கடந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அதிக கோல்கள் அடித்து இருந்தார். அத்துடன் லா லிகா போட்டியிலும் 36 கோல்கள் அடித்து கோல்டன் ஷூவை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் நடந்த பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க அணிக்காக 6 கோல்கள் அடித்து, வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ''மெகன் ராபின்னோ'' உலகின் சிறந்த வீராங்கனை விருதை தனதாக்கினார். அத்துடன், அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜில் எல்லிஸ் சிறந்த பெண் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top