Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
25
சர்வதேச சாதனையாளர் விருதை பெற்றார் மோடி!

Gossip News - சர்வதேச சாதனையாளர் விருதை பெற்றார் மோடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

105 Views
சனத்தொகை கூடிய நாடுகளில்  இந்தியாவும்  அடங்கும். மேலும் அப்படியான  நாடுகளில் அபிவிருத்தி  திட்டங்களை அமுல்படுத்துவதும் கடினம் தான். 

ஒட்டுமொத்த மக்களும் பொருந்த கூடிய அபிவிருத்தி திட்டங்களை அமுல் படுத்துவதென்பது இலகுவான விடயமல்ல. அடிமட்ட கிராம புறங்களில் இருந்து ஆரம்பித்து அத்தனை பேருக்கும் பயன்தர கூடிய திட்டங்களை உருவாக்குவது மிகவும் முக்கியம். அப்படியொரு திட்டத்தை உருவாக்கிய பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது .
 
இந்தியாவின் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து செயற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில் கழிவறைகள் அமைத்து கொடுத்தல் , பொதுக்கழிவறைகளை அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் நடைமுறை படுத்த பட்டது.

இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பும் நடைமுறை படுத்த பட்டுள்ளது.

இத்திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் மோடிக்கு சர்வதேச சாதனையாளர் விருதான உலக கோல்கீப்பர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு இன்று குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. நியூயோர்க்கில் ஐ .நா பாதுகாப்பு சபை கூட்டத்தின் இடையே இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக பணக்காரரான பில் கேட்ஸ் இந்த விருதை மோடிக்கு வழங்கி வைத்தார்.

விருது பெற்ற பிரதமர் மோடி உரையாற்றுகையில் மகாத்மா காந்தியின் தூய்மை கனவு இப்போது நிறைவேறியிருப்பதாக கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தை நிறைவேற்றியதுடன், அதனை தங்களது அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாற்றிய கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தினால், 3 லட்சம் மக்கள் பல்வேறு நோய்களில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர், என உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதை மோடி சுட்டிக் காட்டினார்.


 
 
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top