Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
சிறுமியிடம் சில்மிஷம் பண்ணிய பாதிரியார் - சாத்தானையே கடுப்பேற்றும் வாக்குமூலம்!!!

Sooriyan Gossip - சிறுமியிடம் சில்மிஷம் பண்ணிய பாதிரியார் - சாத்தானையே கடுப்பேற்றும் வாக்குமூலம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

546 Views
கால மாற்றத்தில் பல கொடூரங்களும், முறை தவறல்களும் சர்வ சாதாரணமாக எல்லா நாடுகளிலும் நடைபெற்றவண்ணம் உள்ளன. அதிலும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் முறைகேடுகளில் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடையாத நாடுகள் என்ற வேறுபாடு இதில் இல்லை. 

சமூகத்தின் கீழ்மட்டத்தில் கல்வியறிவில் குறைந்தநிலை கொண்ட, குற்றப்பின்னணி கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும் இப்படியான பாலியல் பலாத்காரங்கள் ஒருபக்கம் பதிவாகிக்கொண்டிருக்க, மற்றோரு பக்கம் சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள, மதிக்கப்படும் ஒரு சிலர் செய்கின்ற பாலியல் முறைகேடுகளானது "வேலியே பயிரை மேய்தல்" எனும் முதுமொழிக்கு சான்றாய் அமைந்து விடுகின்றமை கவலை தரும் விடயமே. இப்படியான ஒரு பாலியல் முறைகேடானது அண்மையில் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் கெய்தஸ்பெர்க் நகரத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இறைபணி செய்யும் ஒரு மதிப்பிற்குரிய பாதிரியார் ஒருவர், சிறுமி ஒருத்தி மீது தனது பாலியல் வக்கிரத்தை காட்டப்போய் முறையாக சிக்கிக்கொண்டதுடன், சமூகத்திலுள்ள தனது மரியாதையும் தானே குழிதோண்டி புதைத்துள்ளார்.

தேவாலயத்துக்கு அடிக்கடி வந்து செல்லும் சிறுமி ஒருத்தி பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாருமற்று தனித்து வாழ்வதை அறிந்துகொண்ட 42 வயதுடைய குறித்த பாதிரியார், சிறு வயதில் தனியாக வாழக்கூடாது என்று கூறி, தான் பணி செய்த அதே தேவாலயத்தில் அந்தச் சிறுமி வாழ்வதற்கு ஏற்ற வகையில் சிறிய அறை வசதியையும் தயார்படுத்திக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த சிறுமியை கடந்த ஜனவரி மாதமளவில் ஒருநாள் தனது அறைக்கு அழைத்த அந்தப் பாதிரியார், சிறுமியை கற்பழிக்க முயன்றதாக நிலையில், எப்படியோ தப்பித்து வெளியேறிய சிறுமி இந்த விஷயம் தொடர்பில் அமைதி காத்து வந்திருந்தார். இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பாதிரியார், தொடர்ந்து பாலியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை பொறுக்க முடியாத அந்தச் சிறுமி காவல்துறையில் முறைப்பாடு கொடுத்ததால் இந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளியே வந்துள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பின்னர், அந்த பாதிரியாரை கைது செய்வதற்கு நீதிமன்றினூடாக பிடியாணை உத்தரவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு முயன்றபோது அதனை தெரிந்துகொண்ட பாதிரியார் தானே வந்து சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையால் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆக்டேவியோ காண்டரிரோ என்ற 42 வயதுடைய குறித்த பாதிரியாரால் வேறு யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்பதே அந்த அறிவிப்பு.

இது இப்படியிருக்க, குறித்த பாதிரியாரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, ‘‘சிறுமியின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தானே என்னை இவ்வாறு செய்ய தூண்டினான்’’என அவர் கூறிய விடயமானது காவல்துறையினரை மட்டுமல்லாது எல்லோரையும் அதிர்ச்சிக்கும், கடும் கோபத்துக்கும் உள்ளாக்கிவிட்டதாக அமெரிக்க செய்திகள் கூறுகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top