Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
உலக சுற்றுலா தினம் இன்று!!!

SooriyanFM Gossip - உலக சுற்றுலா தினம் இன்று!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
உலக நாடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு துறை என்றால் அது சுற்றுலா துறைதான். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறையும் மிகவும் முக்கியமானது. எனவேதான் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இயற்கையாக அமைந்த சுற்றுலாத்தலங்களை பாதுகாப்பதோடு, புதுவிதமான செயற்கை சுற்றுலாத்தலங்களையும் நிதி ஒதுக்கீடு செய்து உருவாக்குகின்றது. இதன்மூலம் பாரிய வருமானத்தையும் ஈட்டுகின்றது.

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலா எப்படி அரசியல், சமூக, பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விவரிக்கும் விதத்திலும் செப்டம்பர் 27 ஆம் திகதி உலக சுற்றுலா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 'சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு: அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம்' என்பது இந்தாண்டின் மையக்கருத்து. ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தை ஒரு நாடு நடத்துகிறது . இந்தாண்டு அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

கல்வி, கலாசாரம், வியாபாரம் என சுற்றுலாவில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பெருமை, அடையாளம், தனித்தன்மை உள்ளது. ஒரு இடத்தில் வசிப்பவர்கள், புதியதொரு இடங்களை காண செல்வது என்றால் மகிழ்ச்சி தானே. மலைகள், நீர் வீழ்ச்சி, தீவுகள், உலக அதிசயங்கள், கட்டடங்கள், கேளிக்கை பூங்காக்கள் என உலகில் பல்வேறு வகையான சுற்றுலா தளங்கள் உண்டு.

உலகில் அதிக சுற்றுலா பயணிகளை கவரும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் முதலாவதிடத்தை பெற்றுள்ளது. அதேபோல அடுத்தடுத்த இடங்களை ஸ்பெயின், அமெரிக்கா, சீனா, இத்தாலி , துருக்கி , மெக்சிகோ , ஜெர்மனி , தாய்லாந்து
பிரித்தானியா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top