Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
27
அமெரிக்காவில் ஏழை எளியவர்களுக்கான இலவச உணவகம்!!!

SooriyanFM Gossip - அமெரிக்காவில் ஏழை எளியவர்களுக்கான இலவச உணவகம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

279 Views
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை கண்டு வியக்கும் நமக்கு  அதே உலகத்தில்  ஒருவேளை உணவின்றி  உயிரிழக்கும்  மக்களின் எண்ணிக்கை  எங்கள்  கண்களுக்கு  அரிதாகவே புலப்படுகின்றது.  தானத்தில்  மிகச்சிறந்த தானம் பசியால் வாடுபவர்களுக்கு  உணவளிப்பதுதான். இந்த நவீன உலகில்  ஒருநாளைக்கு  நாம் வீண்விரயம் செய்யும் உணவை  சேர்த்தாலே ஒரு  கிராமத்திற்கே உணவளித்திடலாம்.   அவ்வளவு வீண்விரயம்  செய்கின்றோம். இப்படி  இருக்க இலவச உணவகம்  ஒன்றை ஏழை எளியவர்களுக்காகவே  நடத்தி வருகின்றனர் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர். 

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள பிரெவட்டன் நகரில் பிரட்டீ மெக் மில்லன்-லிசா தோமஸ் மெக்மில்லன் என்ற தம்பதியினர் பசியால் வாடும் ஏழை எளியவர்களுக்காகவே உணவகம் ஒன்றை நடத்துகின்றனர்.

ஓய்வு பெற்ற இந்த தம்பதி தங்களின் ஓய்வூதிய பணத்தை கொண்டு சேவை நோக்கத்துடன் இந்த உணவகத்தை நடத்தி வருகின்றனர். இந்தஉணவகத்தில் விலைப்பட்டியல் கிடையாது. உணவகத்தில் சாப்பிடும் நபர் தாங்கள் கொடுக்க விரும்பும் பணத்தை உணவகத்தில் இருக்கும் நன்கொடை பெட்டியில் போடலாம். அதிலும் அதிகபட்சமாக 5 டொலருக்கு மேல் நன்கொடை பெட்டியில் போடக்கூடாது என்பது மெக் மில்லன் தம்பதியினரின் கனிவான வேண்டுகோள்.

இதனால் சிலர் பண்டமாற்று முறையில் தாங்கள் சாப்பிடும் உணவுக்காக தங்கள் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி செல்கின்றனர். மேலும் சிலர் உணவகத்தில் உணவு பரிமாறுவது உள்ளிட்ட தங்களால் முடிந்த வேலைகளையும் செய்து கொடுக்கின்றனர்.

தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்து சாப்பிட்டு செல்கின்றனர். அதிகமாக நன்கொடை பெறுவதை தவிர்த்தாலும் சிலர் தபால் மூலம் காசோலையில் நன்கொடை அனுப்பிவருவதாகவும், மெக் மிலன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், “இதற்கு முன், கல்லூரியில் ஏழை மாணவர்களுக்காக இலவச உணவகம் நடத்தி வந்தோம். முதியவர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். ஏழைகளுக்கு உணவளிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் தேவைக்கு உணவளிக்கிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்” என்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top