Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
01
கசோக்கியை கொல்ல நான் உத்தரவிடவில்லை - சவுதி இளவரசர்

Sooriyan Gossip - கசோக்கியை கொல்ல நான் உத்தரவிடவில்லை - சவுதி இளவரசர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

282 Views
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ஊடகவியலாளர் கசோகியை கொல்ல தான் உத்தரவிடவில்லை என்று மறுப்பு வெளியிட்டுள்ளார்.
''வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிகையின் கட்டுரையில், ஜமால் கசோக்கி சவுதி அரசை கடுமையாக விமர்சித்து, கட்டுரைகள் எழுதினார். இதனால் அவர் சவுதி அரசின் கடும் கோபத்துக்கு ஆளானார்.
 
இதனிடையே, தன்னுடைய திருமண ஆவணங்களை பெறுவதற்காக கடந்தாண்டு ஓக்டோபர் 2ம் திகதி, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கசோகி சென்றார்.

அதுதான் அவரது கடைசி வாழ் நாள் என்பது அவருக்கு தெரியாது. தூதரகத்திற்குச் சென்ற அவர் திரும்பி வரவில்லை. அப்படியே மாயமாகி இருந்தார்.

இதன் பின், சவுதி தூதரகத்தில் அவர் கொல்லப்பட்டதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சாட்டியது. ஆனால் கசோகி கொலைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான அமெரிக்க பொது ஒளிபரப்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டஆவணப்படம் ஒன்றில், கசோகி கொலை தனது கண் முன்னே நடந்ததாகவும் அதற்கு முழு பொறுப்பேற்று கொள்வதாகவும் சல்மான் தெரிவித்தார்.
 
ஆனால், அமெரிக்காவில் கடந்த ஞாயிறன்று ஒரு மணி நேரம் ஒளிபரப்பான பேட்டியொன்றில், ''சவுதி அரேபியாவின் தலைவர் என்ற முறையில் கசோகியின் கொலைக்கு பொறுப்பேற்று கொள்கிறேன். ஏனெனில், சவுதி அரசாங்கத்தில் பணிபுரியும் தனிமனிதர்கள் இந்த கொலையில் ஈடுபட்டதால் பொறுப்பேற்கிறேன். மற்றபடி, கசோகியை கொலை செய்ய உத்தரவிடவில்லை’’ என்று சவுதி இளவரசர் சல்மான் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top